யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் நேற்று 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலையுற்றோம்,அன்னையார் என்னில் மிகுந்த அன்பு கொண்டவர்,கொழும்பில் வாழ்ந்த காலங்களில் அவர்கள் வீட்டுக்கு நான் போகாத நாள் இல்லை என்றே சொல்லலாம்,தன் பிள்ளைகளோடு எப்படி பேசுவாரோ அதே போல் என்னோடும் வெளிப்படையாக பேசக்கூடியவர்,எப்பவும் சிரித்த முகத்துடன் இல்லம் நாடி வருபவர்களை வரவேற்பவர்,திரு நீற்று பூச்சும் சிரித்த முகமும் எப்பொழுதும் கண்ணுக்குள் நிற்கும்,பழகியவர் யாராலும் மறக்க முடியாத அன்புள்ளம் கொண்ட தாயாரை நாம் இழந்து நிற்கின்றோம், அன்னார் சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,மற்றும் கணநாதன்,கௌரி,அண்மையில் மறைந்த வளர்மதி(கவிதா) மற்றும் தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆவார், அன்னையின் பிரிவுத்துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னைக்கு எமது கண்ணீர் பூக்களை மாலையாக்குகின்றோம்,அவர்தம் ஆத்மா புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவடிகளில் அமைதி பெற வேண்டுகின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
தொடர்புகளுக்கு:
மகன்- கணநாதன் 0044 7932254031
மகன்- தயானந்தன் 0044 7860576479
மகன்-காந்தன் -00447428792217
மருமகன் - முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக