வெள்ளி, அக்டோபர் 31, 2025
மரண அறிவித்தல் !திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர்(வேலணை-லண்டன்)
புதன், அக்டோபர் 29, 2025
கண்ணீர் அஞ்சலி!திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் (வேலணை-லண்டன்)
யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் நேற்று 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலையுற்றோம்,அன்னையார் என்னில் மிகுந்த அன்பு கொண்டவர்,கொழும்பில் வாழ்ந்த காலங்களில் அவர்கள் வீட்டுக்கு நான் போகாத நாள் இல்லை என்றே சொல்லலாம்,தன் பிள்ளைகளோடு எப்படி பேசுவாரோ அதே போல் என்னோடும் வெளிப்படையாக பேசக்கூடியவர்,எப்பவும் சிரித்த முகத்துடன் இல்லம் நாடி வருபவர்களை வரவேற்பவர்,திரு நீற்று பூச்சும் சிரித்த முகமும் எப்பொழுதும் கண்ணுக்குள் நிற்கும்,பழகியவர் யாராலும் மறக்க முடியாத அன்புள்ளம் கொண்ட தாயாரை நாம் இழந்து நிற்கின்றோம், அன்னார் சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,மற்றும் கணநாதன்,கௌரி,அண்மையில் மறைந்த வளர்மதி(கவிதா) மற்றும் தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆவார், அன்னையின் பிரிவுத்துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னைக்கு எமது கண்ணீர் பூக்களை மாலையாக்குகின்றோம்,அவர்தம் ஆத்மா புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவடிகளில் அமைதி பெற வேண்டுகின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025
மரண அறிவித்தல்!திருமதி,வளர்மதி முரளிதரன்(வேலணை-லண்டன்)
திங்கள், ஜூன் 09, 2025
மரண அறிவித்தல் திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன்!(வேலணை-சுவிஸ்)
அன்னார் வேலணையை சேர்ந்த அமரர்களான சக்திவேல் பூபதியம்மா மண இணையரின் புதல்வியும்,
புளியங்கூடலை சேர்ந்த அமரர் பரம்சோதி இந்திராதேவி மண இணையரின் மருமகளும்,
பரம்சோதி பார்த்தீபன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தீபிகா,லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராஜா (வவுனியா),செல்வராணி(வவுனியா),செல்வமலர்(சுவிஸ்),
தவராசா(சுவிஸ்),செல்வரதி(சுவிஸ்)செல்வரஞ்சிதம்(வேலணை)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹேமலதா(வவுனியா),அமரர் இராமநாதன்,இராசரத்தினம்(சுவிஸ்),சாந்தினி(சுவிஸ்),அமரர் தவராசசிங்கம்,நாகதீபன்(வேலணை),காண்டீபன்(புளியங்கூடல்),பிரதீபன்(புளியங்கூடல்),ஆதீபன்(கனடா),குணதீபன்(யாழ்ப்பாணம்),மகாதீபன்(சுவிஸ்)ஆகியோரின் மைத்துனியும்,
சுகந்தினி(புளியங்கூடல்),சிந்துஜா(புளியங்கூடல்),லவப்பிரியா(கனடா),தற்பரா (யாழ்ப்பாணம்),தர்ஷா(சுவிஸ்)ஆகியோரின் சகலியும் ஆவார்,
அன்னாரது இறுதி நிகழ்வுகள்:16.06.2025 திங்கட்கிழமை காலை 08:00 மணியில் இருந்து 11:00 மணிவரை Hörnli cemetery Friedhof am Hörnli
Hörnliallee 70,4125 Riehen,
switzerland எனும் முகவரியில் நடைபெறும்.
தொடர்புக்கு:கணவர் பார்த்தீபன்
+41764515842