செவ்வாய், ஜனவரி 31, 2017
வெள்ளி, ஜனவரி 06, 2017
கண்ணீர் அஞ்சலி!திரு நல்லையா பரம்சோதி அவர்கள்(புளியங்கூடல்)
மிகவும் மதிற்பிற்குரிய திரு நல்லையா பரம்சோதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை காண்டீபன் பரம்சோதி அவர்களின் முகநூல் மூலமாக அறிந்து மிகவும் துயரடைந்தோம்,நல்ல அன்பும்,பண்பும்,ஆதரவும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் இவர்.தமது பெற்றோரின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டவராக,அமைதியான சுபாவம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மிகப் பேரிழப்பு என்பதுடன் அவரது உறவுகள் ஊர் மக்கள் எல்லோருக்குமே மிகப்பெரும் இழப்பாகவே அமைந்து விட்டது.இவ்விழப்பால் துயர் சுமந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
செவ்வாய், ஜனவரி 03, 2017
மரண அறிவித்தல்!திரு,கணபதிப்பிள்ளை யோகலிங்கம்(புளியங்கூடல்)
![]() |
வந்தது:03.06.1954-விரைந்தது:01.01.2017 |
காலஞ்சென்ற யோகமலர், யோகவசந்தன், யோகவாசு, யோகவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, வரதாலட்சுமி, கெங்காலட்சுமி, மற்றும் தனலட்சுமி, யோகலட்சுமி, நாகலிங்கம், மகாலிங்கம், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மாலினி, யசோதா, சிவஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் திருவுடல் புளியங்கூடல் சந்தி சரவணை வீதியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு யோகவசந்தன் —
இலங்கை செல்லிடப்பேசி: +94773534403
நாகலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94776947457
யோகலட்சுமி — இலங்கை செல்லிடப்பேசி: +94773475131
புளியங்கூடல்.கொம் குழுமம் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)