வியாழன், செப்டம்பர் 27, 2012

கண்ணீர் பூக்கள் சொரிகின்றோம்!

எமை விட்டு உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் நிலைத்து வாழும் இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்களுக்கு கண்ணீர்ப் பூக்கள் சொரிந்து எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்! 
பெற்றோர் முத்தமிட:09.05.1972
 உறவுகள் சத்தமிட:15.09.2012
அன்பு"என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட நேசத்திற்குரியவன்!
நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன்!
உதவி புரிவதில் கொடையாளனானவன்!
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்
கொண்டாட்டங்களை தவிர்த்து வந்த தேசபக்தன்!

நீ சுகவீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்தாய்
என்பதறிந்து அதிர்ச்சியும்,துயரும் கொண்டு நிற்கின்றோம்.
உன் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாதது!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல
சக்தியை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரது குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை
தெரிவித்துக்கொள்கிறோம்!

எசன் வாழ் தமிழ் மக்கள்

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

கண்ணீர் அஞ்சலி!!!இராதாகிருஷ்ணன் அன்பழகன்

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி எசனை வத்திவிடமாகவும் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்கள் 15.09.2012 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதறிந்து சொல்லொணா துயரடைந்தோம்!
(அன்னை மடியில்:09.05.1972 ஆண்டவன் அடியில்:15.09.2012)
அவருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக
சமர்ப்பிக்கின்றோம்! 

அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
குடும்பம்,நட்பு வட்டம் என எப்போதும் 
ஒவ்வொரு நினைவுகளாய் பகிர்ந்து கொண்டிருப்பாய்!
தாயக நினைவுகளால் கண்ணீர் விட்டழுவாய்!
யார் தப்பு செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டுமென 
வாளெடுத்து வீரநடை போட்டவன் நீ!
அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவன் நீ!
இன்று ஏன்தான் மெளனித்தாய்?
எமை விட்டு பயணித்தாய்?
யார் யாருக்கெல்லாமோ கவிதை 
எழுதி தரச்சொல்வாய்,
இன்று உனக்கே கவிதை 
எழுத வைத்து விட்டாயே!
நண்பா!இனி என்றுதான் காண்போம் உன்னை?!

அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
உன் மனைவி கதறும் ஒலி 
உனக்கு கேட்கவில்லையா?
உன் செல்ல மகன் உன்னை தேடுவது 
உனக்கு தெரியவில்லையா?
உன் பாசமிகு பெற்றோர் வன்னி மண்ணில் 
ஒப்பாரியிட்டு புலம்புவது 
உனக்கு புரியவில்லையா?
உன் சகோதரரின் கூக்குரலோசை 
உனக்கு விளங்கவில்லையா?
உன் நண்பர்களின் பரிதவிப்பு 
உனக்கு புரியவில்லையா?
உன் உறவுகள் கூடி மாரடிப்பது 
உனக்கு தெரியவில்லையா?
அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?

அன்பின் நண்பனே!நீ எம்மை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் எம்முடனேயே  வாழும்!
உனக்கு எம் கண்ணீர் 
துளிகளை காணிக்கையாக்குகின்றோம்!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 27/09/2012, பிற்பகல் 1மணியிலிருந்து 3மணி வரை 
முகவரி:Friedhof am Hellweg, Des hellweg 95, 45279, Essen, Germany 
தொடர்புகளுக்கு
தேன்மொழி - மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4920145875067
அன்புச் செல்வன் — பிரித்தானியா
தொலைபேசி: +441322293891
இராதாகிருஸ்ணன் — இலங்கை
தொலைபேசி: +94243247991



துயருடன்!