ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி,பாக்கியம் திருநாவுக்கரசு(நயினாதீவு-கொழும்பு)

நயினாதீவை சொந்த இடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருத்துவரும் சட்டவாளருமான திருவாளர் தியாகர் திருநாவுக்கரசு அவர்களின் துணைவியார் பாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் இன்றைய தினம்(22.04.2018)காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரை ஏற்படுத்தியது.அம்மாவின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் இன்றும் கண்களினுள் நிழலாடுகின்றது.ஊர் பேச்சு வழக்கும் எளிமையான வாழ்க்கை முறையும் என்னை வியக்க வைத்திருக்கிறது.ஒரு பண்பான குடும்பம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் பாக்கியம் அம்மா அவர்கள்.அப்பு,ராசா என்று அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் ஒரு முறை அப்படி அழைக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு அம்மாவின் வார்த்தைகளில் அன்பு பொங்கும்.எமக்கு பாக்கியம் அம்மாவின் இழப்பு பேரிழப்பாகவே அமைந்திருக்கிறதென்றால் அவரது குடும்பத்தாருக்கு இது மாபெரும் இழப்பாகவே அமைந்திருக்கும் என்பது மிகவும் துயரான ஒன்றே.எல்லாவகைகளிலும் மருத்துவரும் சட்டவாளருமான ஐயாவிற்கு பக்க பலமாக இருந்து செயற்பட்டவர் பாக்கியம் அம்மா.இந்த இழப்பால் தவித்திருக்கும் ஐயாவிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அம்மாவின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற அவர்களின் குலதெய்வமாகிய நயினை நாகம்மையை பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

தொடர்புகளுக்கு:

கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777588721

தியாகராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411443849

சிவநேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794853273

அலெக்ஸாண்டர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917634614030

சுரேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447975573148

சுபோதினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772186665

செம்மனச்செல்வி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776736833

ஜீவமணி — டென்மார்க்
தொலைபேசி: +4528830893

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக