
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி முத்துகிருஸ்ணன் அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், தயாளன்(கனடா), தயாளனி(ஆசிரியை- கொக்குவில் ஸ்ரீஇராமகிருஸ்ண வித்தியாசாலை), காலஞ்சென்ற குணாளன் மற்றும் குணாளனி, நல்வதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், தலைவர் நாகராசா அவர்களின் பாசமிகு சகோதரரும், நளாயினி(கனடா), சிவநாதன்(சிவன் கிறீம் கவுஸ்- திருநெல்வேலி), விஜயன் சிவபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இராசதுரை, ஜெகதாம்பிகை, குகராசன் ஆகியோரின் சிறிய தந்தையும், தேனுசா, அபிஷா, இராசேந்திரம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மகாராஜன், மனோகரி(கனடா), காலஞ்சென்ற கபிஷா, சாதனன், கீதப்பிரியா, விற்பரன், வித்தகன், அட்சயா, பிருந்தன், டனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு அன்னாரது திருவுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
மகள் யாழ்ப்பாணம்-+94774848874