செவ்வாய், நவம்பர் 10, 2026
கண்ணீர் அஞ்சலி!திருமதி,புவனேஸ்வரி(குஞ்சக்கா)பரமேஸ்வரன்(புளியங்கூடல்-ஜெர்மனி முன்ஸ்ரர்)
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் முன்ஸ்ரர் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரன் புவனேஸ்வரி(குஞ்சக்கா)அவர்கள் இன்று 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலைகொண்டு நிற்கின்றோம்,அன்னார் புளியங்கூடல் பிரபல ஒலி ஒளி அமைப்பாளர் லைற் அப்பா என்று அழைக்கப்படும் அமரர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா மண இணையரின் புதல்வியும் மதுராங்கனி,லுகாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்,அவர்தம் இழப்பால் துயரக் கடலில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதல்களை தெரிவிப்பதோடு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்,அவர்தம் ஆத்மா புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர்,செருத்தனை பதியுறை மகாமாரி திருப்பாதங்களில் அமைதிபெற வேண்டுகின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
கண்ணீர் அஞ்சலி!திருமதி விஜயலெட்சுமி வரதராசா(புளியங்கூடல்)
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி விஜயலெட்சுமி வரதராசா அவர்கள் 07.11.2026 சனிக்கிழமை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் கொண்டோம்,அன்னார் அமரர்களான கந்தசாமி அன்னம்மா மண இணையரின் புதல்வியும் மகாலிங்கம்,காலம்சென்றவர்களான பரஞ்சோதி,மகாதேவன்(தேவர்)
குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா-ஜெர்மனி)
ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார், அன்னையின் பேரிழப்பால் வாடித்துடிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை தெரிவிப்பதோடு தாயாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்!அவர்தம் ஆத்மா செருத்தனைப்பதி வாழ் மகாமாரி அம்பாள்,இந்தன் முத்து விநாயகர் திருப்பாதங்களில் அமைதி பெற வேண்டுகின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


