புதன், மார்ச் 18, 2015

மரண அறிவித்தல்!திருமதி மேரி பெனடிக்ரா யோசப்பின் பிறான்சிஸ் ஜெயரட்ணம்

தோற்றம் : 12-01-1943 — மறைவு : 16 -03-2015
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Tonisvorst ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பெனடிக்ரா யோசப்பின் பிறான்சிஸ் ஜெயரட்ணம் அவர்கள் 16-03-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரான்சிஸ் ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும், கனீசியஸ், ஜக்குலின் நிலானி, சனிற்றா சாளினி, பீற்றுஸ் கிறேசியன்(ஜெர்மனி), ஆன் டிலித்திரா கார்டினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிசிலியா(மணி- லண்டன்), ஜேற்றூட்(பவளம்- இலங்கை), அருட்சகோதரி இமல்டா(குணம்- இலங்கை திருச்சிலுவை கன்னியர் மடம்), ரதி(இலங்கை), பீற்றர்(கனடா), காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லஸ், சில்வெஸ்ரர், ஜோண் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அருட்குமார், ஜீன், ஜஸ்ரின், நிக்‌ஷன், நிஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அக்னஸ், றீசா, பொன்மலர், ஜெனோவி, காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, சாமிநாதர், லீனஸ்ரெட்ணம், மேரி திரேசா, பீற்றர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கரோலின், ஜொனெவன், சிந்தியா, நயானா, அறினா, அனிக்கா, யூலியன், டேமியன், செபஸ்ரியன், டிலான், அன்றூ, ஆரோன், டெபிலெயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின்னர் Landladen Demandt, Huverheide 6, 47918 Tonisvorst எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்:
திருப்பலி திகதி: திங்கட்கிழமை 23/03/2015, 09:00 மு.ப முகவரி: St. Godehard Kirche Markt1, 47918 Tönisvorst, Germany
நல்லடக்கம் திகதி: திங்கட்கிழமை 23/03/2015
முகவரி: Anrather Str., 47918 Tönisvorst, Germany
தொடர்புகளுக்கு:
பிரான்சிஸ் ஜெயரட்ணம்(கணவர்) — ஜெர்மனி தொலைபேசி: +4921529575919 செல்லிடப்பேசி: +4915215716627
ஜெயரட்ணம் கனீசியஸ்(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +492152510690 செல்லிடப்பேசி: +491713636156
கிறேசியன் ஜெயரட்ணம்(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +4921519373226 செல்லிடப்பேசி: +491629843355
நிலானி அருட்குமார்(மகள்) — ஜெர்மனி தொலைபேசி: +491714430930
கார்டினி நிக்சன்(மகள்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447443957483

ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

மரண அறிவித்தல்!திருமதி பாக்யலட்சுமி யோகன்

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்‌டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி யோகன் அவர்கள் 21-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி(சிங்கப்பூர்க்காரன்)பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பியப்பா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், யோகன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகன்யா(லண்டன்), திலகராணி(ஐக்கிய அமெரிக்கா), குமுதினி(இலங்கை), காயத்திரி(மக்கள் வங்கி- அம்பாறை) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கணேசு, நடராசா, துரைராசா, புனிதவதி, மற்றும் சரஸ்வதி(கனடா), குமாரவேலு(இலங்கை), தவமணி(பரிஸ்), நீலாம்பாள்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், டிலிபராசசிங்கம்(லண்டன்), அன்ரன் சுதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும், மனோன்மணி(இலங்கை), சுப்ரமணியம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகன், நாகம்மா, சண்முகவடிவு, பரமேஸ்வரன், படியலிங்கம், சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பார்வதி ஆகியோரின் அன்புச் சகலியும், மகிரன், வருணிகா, ஆர்வின் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
யோகன்(கணவர்) — இலங்கை தொலைபேசி: +94115238511
செல்லிடப்பேசி: +94779008031
சுகன்யா(மகள்) — பிரித்தானியா தொலைபேசி: +442034901615

திங்கள், ஜனவரி 12, 2015

மரண அறிவித்தல்!திருமதி ரதி சிவநேசசெல்வராஜா(புளியங்கூடல்)

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரதி சிவனேசசெல்வராஜா அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவனேசசெல்வராஜா(செல்வராஜா) அவர்களின் அன்பு மனைவியும், அன்பழகன்(அன்பன்- சுவிஸ்), மதியழகன்(மதி- கனடா), சுகந்தி(ராஜி- கனடா), விஜி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுஜேந்திரன்(பவா), பாலேந்திரன், காலஞ்சென்ற சுலோச்சனா, தர்மாம்பாள்(ராணி), விஜயரஞ்சனி, ராஜேந்திரன், மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தர்ஷினி(சுவிஸ்), விஜயகுமாரி, வியஜகுமாரன்(அப்பன்), ரமணன்(Shavina Auto Service Owner- Brampton) ஆகியோரின் அன்பு மாமியாரும், தியாகேஸ்வரி, பாமா, காலஞ்சென்ற பரமேஸ்வரன், காந்தீஸ்வரன், பானுமதி, வரதேஸ்வரி(தேவி), காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிரூஷன், சிவானு, அஜய், அஜீப், அஸ்வினி, அபிநயா, அகல்யா, அகஷ்யா, வினோஜா, ஷவினா, ஷன்ஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 17/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 11:30 மு.ப முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு அன்பன்(மகன்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41566110513 மதி(மகன்) — கனடா செல்லிடப்பேசி: +16478028647
விஜி(மகள்) — கனடா செல்லிடப்பேசி: +19057906856
அப்பன்(மருமகன்) — கனடா செல்லிடப்பேசி: +16473092880
ரமணன்(மருமகன்) — கனடா செல்லிடப்பேசி: +16478816856

வியாழன், டிசம்பர் 25, 2014

மரண அறிவித்தல்!திருமதி முத்துசாமி கமலமலர்நாயகம்(புளியங்கூடல்)

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி கமலமலர்நாயகம் அவர்கள் 24-12-2014 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், முத்துசாமி அவர்களின் அன்பு மனைவியும், யோகராசா, காலஞ்சென்ற தேவராசா, மகேந்திரராசா, நாகராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகராணி, கண்ணம்மா, காலஞ்சென்ற சிவபாலசிங்கம், ஞானரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும், குலேந்திரன், ரவீந்திரன், ஞானேந்திரன், தவேந்திரன், யோகாம்பிகை, சசிகுமார்(ஜெர்மனி), கீதவாணி, மோகன், நரேந்திரகுமார், கோகிலவாணி, கலைவாணி, தர்மதயாளன், யசோதாவாணி, ப்ரின்சிகா, டிலச்சிகா, நிரோஜன், லிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தினுசன், றொசாந்தன், அனுஷன், விதுசா, அகிலயா, ஒளியரசன், நேதினி, யாழிசை, கஜீவன், பிரவீனா, தமிழ்சுடர், சஜித், அன்பருவி, தர்மிகா, விஷ்ணுகா, கபினயன், தூயனிலவன், துசி, கபினயா, அபினயா, கீர்த்தனா, மதுசன், தர்மித், கதிறரசன், சஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

செவ்வாய், அக்டோபர் 14, 2014

மரண அறிவித்தல்!திருமதி,மணிமேகலை குமாரசுவாமி

மலர்வு : 25.05.1940 — உதிர்வு : 11.10.2014
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தெகிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மணிமேகலை குமாரசாமி அவர்கள் 11-10-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், அப்பாத்துரை நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,குமாரசாமி(ஒட்டுசுட்டான் பேராறு முன்னாள் மனேஜர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,விஜிதி(ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம்-இலங்கை), விமலன்(பிரான்ஸ்), விஜிதா(லண்டன்), விஜியா(ஆசிரியை, தமிழ் மகாவித்தியாலயம்- தெகிவளை), Dr. வாசுகி(சத்திர சிகிச்சை நிபுணர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராமலிங்கம்(முன்னாள் இலங்கை போக்குவரத்து ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கருணானந்தன்(முன்னாள் தபால் அதிபர்- இலங்கை), வசந்தராஜீவி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(லண்டன்), மதிவண்ணன்(இலங்கை), நிறஞ்சன்(கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கஜானன், மதுமிதா, கஹானா, கிருஷிகா, ரக்‌ஷிகா, ஹரி‌ஷன், தக்‌ஷினியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13.10.2014 திங்கள் அன்று கல்கிசையில் நடைபெற்றது.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

ஞாயிறு, அக்டோபர் 12, 2014

கண்ணீர் அஞ்சலி!திருமதி,மணிமேகலை குமாரசுவாமி

பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் தற்சமயம் தெகிவளையிலும் வசித்து வந்த திருமதி,மணிமேகலை குமாரசுவாமி(மணி அக்கா)நேற்று (11.10.2014)சனிக்கிழமை காலமானார் என்ற செய்தி அறிந்து தாங்கொணா துயருற்று கலங்கி நிற்கின்றோம்.அவரது இழப்பால் கதிகலங்கி நிற்கும் அவரது குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுப்பதுடன் அன்னாரது ஆத்மா பூரண அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து எமது கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பணம் ஆக்குகின்றோம்!
ஓம்!சாந்தி!சாந்தி!சாந்தி!

குமாரு பாலசிங்கம்(சந்திரா)
குடும்பம் 
ஜெர்மனி.