
மூர்த்தி அண்ணா அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.வெள்ளை நிற ஆடைகளையே எப்பொழுதும் அவர் அணிந்திருப்பார்.அவரின் உள்ளமும் அப்படித்தான் பசுமையாகவே இருந்தது.அவரது பெற்றோர் கொண்டிருந்த எளிமை,பண்பு,கொடை என்பவற்றை மூர்த்தி அண்ணாவும் தாங்கியே நடந்தார்.அவரிடத்தில் கோபம் என்பதை காண முடியாது,அவரது புன்னகை வதனத்தை எப்பவுமே மறக்க முடியாது!
மூர்த்தி அண்ணாவின் இழப்பால் கண்ணீரில் உழலும் ஊர் உறவுகளுடன் புலம்பெயர்ந்து வாழும் நாமும் கண்ணீரை பகிர்ந்து கொள்கின்றோம்.
அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக