![]() |
உறவாக:04.02.1960-இறையாக:26.03.2018 நாரந்தனையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிர்வாக உத்தியோகத்தர்,தம்பலகாமம் உதவி அரசாங்க அதிபர்,கரைச்சி பிரதேச செயலாளர்,தற்போதைய கண்டாவளை பிரதேச செயலாளர்)அவர்கள் (26.03.2018)திங்கட்கிழமையன்று காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம். |
அன்னார் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் அன்புப் புதல்வரும்,
சரவணபவன்(முன்னாள் தபாலதிபர் ராஜகிரிய)காலஞ்சென்ற விசாலாட்சி(முன்னாள் ஆசிரியை ராஜகிரிய-மற்றும் சின்னமடு வித்தியாலயம்)ஆகியோரின் மருமகனும்,
மலர்விழியின்(ஆசிரியை யாழ்,இந்துக்கல்லூரி)ஆருயிர்க் கணவரும்,இளம்பரிதியின்(யாழ்,இந்து ஆரம்ப பாடசாலை)பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நிர்மலாதேவி,மற்றும் பரமேஸ்வரன்,செந்தமிழ்ச்செல்வி,சாந்தினி காலஞ்சென்ற மதியழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மங்கை,இந்துமதி,விக்னேஸ்வரமூர்த்தி,காந்தரூபி(பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி)மற்றும் காலஞ்சென்ற விஜயன்,செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனரும்
வித்யா,வினோசன்,ராகவி ஆகியோரின் மாமாவும்
கரிஷன்,சஞ்சியா,லக்ஸ்மன் ஆகியோரின் சித்தப்பாவும்
சவிநாத்,யதுசாந்த்,நிரோஷ்,தனுஷ்,கரிஷ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்(29.03.2018)வியாழக்கிழமை காலை 8:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 11:30 மணியளவில் அன்னாரது புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு மீண்டும் கலாசாலை வீதியூடாக கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்-009477640573
0094778286504
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக