திங்கள், ஜனவரி 12, 2015

மரண அறிவித்தல்!திருமதி ரதி சிவநேசசெல்வராஜா(புளியங்கூடல்)

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரதி சிவனேசசெல்வராஜா அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவனேசசெல்வராஜா(செல்வராஜா) அவர்களின் அன்பு மனைவியும், அன்பழகன்(அன்பன்- சுவிஸ்), மதியழகன்(மதி- கனடா), சுகந்தி(ராஜி- கனடா), விஜி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுஜேந்திரன்(பவா), பாலேந்திரன், காலஞ்சென்ற சுலோச்சனா, தர்மாம்பாள்(ராணி), விஜயரஞ்சனி, ராஜேந்திரன், மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தர்ஷினி(சுவிஸ்), விஜயகுமாரி, வியஜகுமாரன்(அப்பன்), ரமணன்(Shavina Auto Service Owner- Brampton) ஆகியோரின் அன்பு மாமியாரும், தியாகேஸ்வரி, பாமா, காலஞ்சென்ற பரமேஸ்வரன், காந்தீஸ்வரன், பானுமதி, வரதேஸ்வரி(தேவி), காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிரூஷன், சிவானு, அஜய், அஜீப், அஸ்வினி, அபிநயா, அகல்யா, அகஷ்யா, வினோஜா, ஷவினா, ஷன்ஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 17/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 11:30 மு.ப முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு அன்பன்(மகன்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41566110513 மதி(மகன்) — கனடா செல்லிடப்பேசி: +16478028647
விஜி(மகள்) — கனடா செல்லிடப்பேசி: +19057906856
அப்பன்(மருமகன்) — கனடா செல்லிடப்பேசி: +16473092880
ரமணன்(மருமகன்) — கனடா செல்லிடப்பேசி: +16478816856

வியாழன், டிசம்பர் 25, 2014

மரண அறிவித்தல்!திருமதி முத்துசாமி கமலமலர்நாயகம்(புளியங்கூடல்)

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி கமலமலர்நாயகம் அவர்கள் 24-12-2014 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், முத்துசாமி அவர்களின் அன்பு மனைவியும், யோகராசா, காலஞ்சென்ற தேவராசா, மகேந்திரராசா, நாகராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகராணி, கண்ணம்மா, காலஞ்சென்ற சிவபாலசிங்கம், ஞானரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும், குலேந்திரன், ரவீந்திரன், ஞானேந்திரன், தவேந்திரன், யோகாம்பிகை, சசிகுமார்(ஜெர்மனி), கீதவாணி, மோகன், நரேந்திரகுமார், கோகிலவாணி, கலைவாணி, தர்மதயாளன், யசோதாவாணி, ப்ரின்சிகா, டிலச்சிகா, நிரோஜன், லிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தினுசன், றொசாந்தன், அனுஷன், விதுசா, அகிலயா, ஒளியரசன், நேதினி, யாழிசை, கஜீவன், பிரவீனா, தமிழ்சுடர், சஜித், அன்பருவி, தர்மிகா, விஷ்ணுகா, கபினயன், தூயனிலவன், துசி, கபினயா, அபினயா, கீர்த்தனா, மதுசன், தர்மித், கதிறரசன், சஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

செவ்வாய், அக்டோபர் 14, 2014

மரண அறிவித்தல்!திருமதி,மணிமேகலை குமாரசுவாமி

மலர்வு : 25.05.1940 — உதிர்வு : 11.10.2014
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தெகிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மணிமேகலை குமாரசாமி அவர்கள் 11-10-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், அப்பாத்துரை நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,குமாரசாமி(ஒட்டுசுட்டான் பேராறு முன்னாள் மனேஜர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,விஜிதி(ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம்-இலங்கை), விமலன்(பிரான்ஸ்), விஜிதா(லண்டன்), விஜியா(ஆசிரியை, தமிழ் மகாவித்தியாலயம்- தெகிவளை), Dr. வாசுகி(சத்திர சிகிச்சை நிபுணர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராமலிங்கம்(முன்னாள் இலங்கை போக்குவரத்து ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கருணானந்தன்(முன்னாள் தபால் அதிபர்- இலங்கை), வசந்தராஜீவி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(லண்டன்), மதிவண்ணன்(இலங்கை), நிறஞ்சன்(கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கஜானன், மதுமிதா, கஹானா, கிருஷிகா, ரக்‌ஷிகா, ஹரி‌ஷன், தக்‌ஷினியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13.10.2014 திங்கள் அன்று கல்கிசையில் நடைபெற்றது.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

ஞாயிறு, அக்டோபர் 12, 2014

கண்ணீர் அஞ்சலி!திருமதி,மணிமேகலை குமாரசுவாமி

பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் தற்சமயம் தெகிவளையிலும் வசித்து வந்த திருமதி,மணிமேகலை குமாரசுவாமி(மணி அக்கா)நேற்று (11.10.2014)சனிக்கிழமை காலமானார் என்ற செய்தி அறிந்து தாங்கொணா துயருற்று கலங்கி நிற்கின்றோம்.அவரது இழப்பால் கதிகலங்கி நிற்கும் அவரது குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுப்பதுடன் அன்னாரது ஆத்மா பூரண அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து எமது கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பணம் ஆக்குகின்றோம்!
ஓம்!சாந்தி!சாந்தி!சாந்தி!

குமாரு பாலசிங்கம்(சந்திரா)
குடும்பம் 
ஜெர்மனி.

வியாழன், அக்டோபர் 09, 2014

கண்ணீர் அஞ்சலி!திருமதி,இலட்சுமி செல்லத்துரை!

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,இலட்சுமி செல்லத்துரை அவர்கள் 07.10.2014 அன்று இறையடி எய்தினார் என்பதறிந்து மிகுந்த துயரடைந்தோம்.சுய கெளரவத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்த அன்னையவர்கள் எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர்.அன்னையின் இழப்பால் துயருறும் அவரது உறவுகளுக்கு ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி நித்தியக்கமலங்களில் அவரது ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!

புதன், ஏப்ரல் 09, 2014

மரண அறிவித்தல்!திருமதி,பொன்னம்மா அரசரெத்தினம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,பொன்னம்மா அரசரெத்தினம் அவர்கள் (08.04.2014)செவ்வாய்க்கிழமை அன்று புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,ராசா சிதம்பரம் தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,காலம்சென்ற திரு,ராசா அரசரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(கார்த்தி)அன்னபூரணம், சொர்ணாம்பிகை, குலசிங்கம், கோணேஸ்வரி மற்றும் நகுலாம்பிகை, கந்தலிங்கம், சிவநாதன், தேவராணி(சந்திரா) தருமராணி, செல்வநாயகி, ஜானகி ஆகியோரின் அன்புச்சகோதரியும்.திருமதி,பூமணி பொன்னம்பலம் அவர்களின் அன்பிற்குரிய மைத்துனியும்,சந்திரராசா,பற்குணராசா ஆனந்தராசா ,தயானந்தன், யோகானந்தன்,காலஞ்சென்ற சண்முகமணி(சண்முகா),காலம்சென்ற வித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  இன்று பிற்பகல்(09.04.2014)அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அவரது புகழுடல் சுருவில்-புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.