செவ்வாய், நவம்பர் 27, 2018

மரண அறிவித்தல்!திருமதி சுபத்திரை சுப்பிரமணியம்(புளியங்கூடல்)

ஊர்காவற்துறை புளியங்கூடல் சக்களாவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திரை சுப்பிரமணியம் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான புளியங்கூடலைச் சேர்ந்த கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சின்னத்தம்பி)அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராசகுமாரி மற்றும் பாலேந்திரன், மகாலிங்கம்(மகேந்திரன்- கனடா), வசந்தகுமாரி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கண்மணி, செல்லையா, சுப்பையா, கனகரட்ணம், நாகம்மா, பார்வதி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கந்தசாமி, பொன்னம்மா, வேலாயுதம், அன்னம்மா, இராசமணி, முருகேசு, அன்னம்மா, கனகேஸ்வரி, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவராசா, ஜெகதீஸ்வரி, தேவமனோகரி(ரோகினி- கனடா), சத்திதரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதா, லலிதா, சுதாகரன், காலஞ்சென்ற வசீகரன், பாஸ்கரன், சுபாஜினி, அனுராஜ்(கொழும்பு), துஸ்யந்தன்(கனடா), யோநதன்(கனடா), அருள்ராஜ்(சுவிஸ்), அருள் அமலா(இந்தியா), கீர்த்தனா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவிராஜன், தனுசிகா, மயூரிகா, திபானி, நிரூபன், சாவித்திரி, ஓவியா, ஆருஷன், யதுசிகா, இனியா, யதீசன், குபேரா(கனடா), நிசோபிகா, கபிநயன், சஸ்ரிக், தேஸ்மிதா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள்(28-11-2018)புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு

க. தேவராசா - மருமகன்
கைத்தொலைபேசி: +94764623543

சு. மகாலிங்கம்(மகேந்திரன்)
கைத்தொலைபேசி: +94771614255

வியாழன், அக்டோபர் 25, 2018

மரண அறிவித்தல்!திரு,அரசரெத்தினம் பற்குணராசா(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,அரசரெத்தினம் பற்குணராசா(பக்கு) அவர்கள் இன்று வியாழக்கிழமை (25.10.2018) அகாலமரணமானார் என்பதை மிகுந்த துயரோடு அனைவருக்கும் அறியத்  தருகின்றோம்.அன்னார் காலம் சென்றவர்களான அரசரெத்தினம் பொன்னம்மா மண இணையரின் புதல்வரும்,காலம் சென்ற சோமசுந்தரம்(காத்தி) மகேஸ்வரி மண இணையரின் மருமகனும்,
வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராகுல்,ராகவி,ராஜிதா,ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம் சென்ற சந்திரராசா,ஆனந்தராசா,
சண்முகமணி,தயானந்தன்,யோகானந்தன்,
காலம் சென்ற வித்தியா ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலம் சென்ற மனோ,ரஞ்சிதன்,வடிவேல்,
கிருஷ்ணதாஸ்,விவேகானந்தன்,
காலம் சென்ற கலைச்செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

இந்துசனின் மாமனாரும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை 10:00 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல் சுருவில் இந்து பொது
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

திங்கள், அக்டோபர் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி நிமலன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சேர்ந்த திரு,கந்தசாமி நிமலன் அவர்கள் காலமானார் என்பதறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.ஆசிரியர்களான கந்தசாமி செல்வநாயகி மண இணையரின் புதல்வனாக வந்துதித்த நிமலன் அவர்கள் இளம் வயதிலேயே தனது பெற்றோர்,உடன்பிறப்புக்கள்,மனைவி,பிள்ளைகள்,நட்புக்கள்,
21.08.1978-19.10.2018
சுற்றத்தார் என அனைவரையும் பிரிந்திருப்பது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நடராஜா வித்தியாலயத்தில் நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் அன்பு,அரவணைப்பு,கண்டிப்பு என எமக்கெல்லாம் நல்ல குருவாக இருந்த செல்வம் ரீச்சரின் குடும்பத்தில் இத்தகையதொரு இழப்பு வந்திருப்பது எல்லோருக்கும் பெரும் மன வேதனையை கொடுத்திருக்கிறது.இத்தருணத்தில் அவர்களது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் நிமலன் அவர்களது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,செல்லத்துரை ரவீந்திரன்(பெரியப்பன்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
கொண்டிருந்த திரு,செல்லத்துரை இரவீந்திரன் அவர்கள் இன்று(14.09.2018) காலமானார் என்பதறிந்து 
மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.
அவரோடும் அவர்தம் குடும்பத்தோடும் பழகிய காலங்கள் 
மறக்க முடியாதவை,பழகுவதற்கு இனிய பண்பாளர்,
அளவோடு பேசும் சுபாவம் கொண்டவர்.
இளமைக்கால நினைவுகளில் எங்களுக்கு 
மூத்தவராக அவரின் ஞாபகங்கள் இன்னும் பசுமையாக தெரிகின்றது.அவரது இழப்புச் செய்தி எமக்கு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எம் கனத்த இதயத்துடன் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வெள்ளி, செப்டம்பர் 07, 2018

மரண அறிவித்தல்!திருமதி மகேஸ்வரி நவரத்தினம்(புளியங்கூடல்)

உறவாக:14.06.1948-உயிராக:06.09.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி(சின்னக்கிளி)நவரத்தினம் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலம் சென்றவர்களான சதாசிவம் பராசக்தி மண இணையரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் மண இணையரின் மருமகளும்
நவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் நாகேஸ்வரி,மகேந்திரன்,ஆறுமுகராசா,கெங்காதேவி,ஆகியோரின் அன்பு சகோதரியும்
மாரிமுத்து, சரோஜினி, இந்திரா,சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
கலாநிதி, ரவீந்திரன்(கல்மடு), ரவிச்சந்திரன்(S.J. மோட்டார்ஸ், யாழ்ப்பாணம்)குமுதினி(சுவிஸ்)மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் குகநேசன்(விஜிதா கபே யாழ்ப்பாணம்)லலிதறஞ்சனி,நந்தினி,சிவலிங்கநாதன்(சுவிஸ்)
கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஜீவிதன்,கஜீவன்,கஷானி,யதுஷன்,டினோஷா, கிர்ஷானி,உஷாந்தன்,கபிஷன்,சேயோன்(சுவிஸ்),திவ்யா,சோபிகா ஆகியோரின் பேத்தியுமாவர்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
இலங்கை- 0094771711819
0094779955919