ஞாயிறு, மார்ச் 12, 2017

மரண அறிவித்தல்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)

உறவாக:20-03-1980-இறையாக:10-03-2017
புளியங்கூடல் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் 10.03.2017 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.அன்னார் கந்தலிங்கம் விஜயரூபனின் அன்பு மனைவியும் ஆரணனன்,ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலம் சென்ற தெய்வேந்திரம் மற்றும் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,கந்தலிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் பேரன்புமிக்க மருமகளும்,சாருலதா,சாந்தகுமார்,சசிகலா,யோகேஸ்வரி,
கிருபாளிணி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,காந்தரூபன்,சிவரூபன்,காலம் சென்ற கேமா,மற்றும் ஞானேந்திரன்,மனோகரன்,சத்தீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 13.03.2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00மணியளவில் புளியங்கூடல் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் 
புளியங்கூடல் மேற்கு 
ஊர்காவற்றுறை.

வெள்ளி, மார்ச் 10, 2017

கண்ணீரோடு அஞ்சலிக்கின்றோம்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)


புளியங்கூடலை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் தற்சமயம் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் ஊர் சென்றிருந்த வேளை விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து(10-03-2017)மிகவும் துயரடைந்து கண்ணீர் மல்கி நிற்கின்றோம்!இந்த இழப்பென்பது பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இவரால் ஓரளவு ஆறுதலை பெற்றிருந்த இவரது குடும்பத்தினருக்கு பெரும் பேரிடியாகவே விழுந்திருக்கிறது.கணவர்,இரு பிள்ளைகள்,தாயார்,என யாவரையும் விட்டுப் பிரிந்த செய்தியானது புளியங்கூடல் மட்டுமல்லாது அயல் ஊர்களையும் புலம்பெயர் தேசத்து ஊர் உறவுகளையும்,அவரது நட்பு வட்டங்கள்  மத்தியிலும் பெரும் சோகத்தை உண்டுபண்ணியிருக்கிறது.இவரது இழப்பை எவராலும் சமப்படுத்த முடியாது.அவரது குடும்பம் ஆறுதலடைய இறை அருள் வேண்டுவதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜனவரி 31, 2017

மரண அறிவித்தல்!திரு கந்தையா நாகரத்தினம்

தொடர்புகளுக்கு:
மனைவி:0049526166210
விஜி:004917670044216
ரஜி:004917665395002
குமார்:00495261934142
கைபேசி:004917642986056
காலம்சென்ற கந்தையா நாகரத்தினம் அவர்கள் புளியங்கூடல் அமரர் மயில்வாகனம் மாஸ்ரரின் சகோதரர் என்பதையும் அறியத்தருகின்றோம்.

வெள்ளி, ஜனவரி 06, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு நல்லையா பரம்சோதி அவர்கள்(புளியங்கூடல்)

மிகவும் மதிற்பிற்குரிய திரு நல்லையா பரம்சோதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை காண்டீபன் பரம்சோதி அவர்களின் முகநூல் மூலமாக அறிந்து மிகவும் துயரடைந்தோம்,நல்ல அன்பும்,பண்பும்,ஆதரவும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் இவர்.தமது பெற்றோரின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டவராக,அமைதியான சுபாவம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மிகப் பேரிழப்பு என்பதுடன் அவரது உறவுகள் ஊர் மக்கள் எல்லோருக்குமே மிகப்பெரும் இழப்பாகவே அமைந்து விட்டது.இவ்விழப்பால் துயர் சுமந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜனவரி 03, 2017

மரண அறிவித்தல்!திரு,கணபதிப்பிள்ளை யோகலிங்கம்(புளியங்கூடல்)

வந்தது:03.06.1954-விரைந்தது:01.01.2017
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை யோகலிங்கம் அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யோகமலர், யோகவசந்தன், யோகவாசு, யோகவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, வரதாலட்சுமி, கெங்காலட்சுமி, மற்றும் தனலட்சுமி, யோகலட்சுமி, நாகலிங்கம், மகாலிங்கம், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மாலினி, யசோதா, சிவஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் திருவுடல் புளியங்கூடல் சந்தி சரவணை வீதியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு யோகவசந்தன் —
இலங்கை செல்லிடப்பேசி: +94773534403
நாகலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94776947457
யோகலட்சுமி — இலங்கை செல்லிடப்பேசி: +94773475131

புளியங்கூடல்.கொம் குழுமம் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

சனி, அக்டோபர் 15, 2016

மரண அறிவித்தல்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(புளியங்கூடல்)

பரிவாக:29.05.1954-பிரிவாக:13.10.2016
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், நாயகம் தம்பதிகளின் மருமகனும், செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், நிருதரன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மருதடியான், கருநாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜிவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை (16-10-2016) ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவரது திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
பரமானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94770366331

வெள்ளி, அக்டோபர் 14, 2016

கண்ணீர் அஞ்சலிகள்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(13.10.2016)வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்று துன்பம் அடைந்து நிற்கின்றோம்.
மூர்த்தி அண்ணா அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.வெள்ளை நிற ஆடைகளையே எப்பொழுதும் அவர் அணிந்திருப்பார்.அவரின் உள்ளமும் அப்படித்தான் பசுமையாகவே இருந்தது.அவரது பெற்றோர் கொண்டிருந்த எளிமை,பண்பு,கொடை என்பவற்றை மூர்த்தி அண்ணாவும் தாங்கியே நடந்தார்.அவரிடத்தில் கோபம் என்பதை காண முடியாது,அவரது புன்னகை வதனத்தை எப்பவுமே மறக்க முடியாது!
மூர்த்தி அண்ணாவின் இழப்பால் கண்ணீரில் உழலும் ஊர் உறவுகளுடன் புலம்பெயர்ந்து வாழும் நாமும் கண்ணீரை பகிர்ந்து கொள்கின்றோம்.
அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!