ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

மரண அறிவித்தல்!திருமதி,மகேஸ்வரி சோமசுந்தரம்[புளியங்கூடல்]

புளியங்கூடல் தெற்கை சொந்த இடமாகக் கொண்டிருந்த திருமதி,மகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள்11.04.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.இவர் காலஞ்சென்ற சோமசுந்தரம்[கார்த்தி]அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற மனோரஞ்சன்[மனோ], வடிவேல், திருமதி வாசுகி பற்குணராசா, கிருஸ்ணன், ஆனந்தன் மற்றும் காலஞ்சென்ற செல்வி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னார்தம் இறுதிக்கிரிகைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று புகழுடல் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்
புளியங்கூடல் தெற்கு
ஊர்காவற்றுறை  

புதன், ஏப்ரல் 08, 2020

அஞ்சலிக்கின்றோம்!திரு,குகப்பிரசாத்[குகன் பிரித்தானியா]

அனனைதீவை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் பிரித்தானியாவை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான திரு,வீரவாகுப்பிள்ளை குகப்பிரசாத்[குகன்]அவர்கள் காலமானா செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது,திரு,குகன் அவர்கள் புளியங்கூடலின் பிரபல தொழிலதிபரான அமரர்களான இரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகளின் இளைய மகள் கங்காலட்சுமியை[கங்கா]திருமணம் புரிந்து புளியங்கூடலை இன்னுமொரு சொந்த ஊராகக் கொண்டவர்,பிறந்த ஊரையும் புகுந்த ஊரையும் இரு கண்களாக நேசித்தவர்.அவர்தம் திடீர் இழப்பு செய்தி அதிர்ச்சிமிகு கணங்களாகவே இருக்கிறது.அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குவதுடன் இப்பேரிழப்பால் துயர் கொண்டு நிற்கும் கங்கா அக்கா மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

திங்கள், மார்ச் 30, 2020

மரண அறிவித்தல்!திருமதி,திரேசா புஷ்பம் கந்தையா(நாரந்தனை)

மலர்வு:07.06.1944-உதிர்வு:30.03.2020
நாரந்தனையை சொந்த இடமாகவும் தற்சமயம் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமான திருமதி,திரேஷா புஷ்பம்(வசந்தி)கந்தையா அவர்கள் இன்று (30.03.2020)திங்கட்கிழமை காலமானார்,அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை கிறிஸ்ரினா மண இணையரின் புதல்வியும் காலஞ்சென்றவர்களான சிதம்பரி அன்னம்மா மண இணையரின் மருமகளும் காலஞ்சென்ற சிதம்பரி கந்தையாவின்(சிறைச்சாலை உத்தியோகஸ்தர்)ஆருயிர்த் துணைவியும்,நிரஞ்சனா,யமுனா,அகல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குலதீபன்,கணேசலிங்கம்(ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்)ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜலக்சன்,கஜரூபன்,கஜதீபன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலம்சென்றவர்களான மார்க்கிரேட்,அமிர்தநாதன் மற்றும் சாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலம்சென்றவர்களான தம்பையா(சுங்க இலாகா)திரேசம்மா,அருளப்பு(மதுவரி இலாகா)ரோசலின் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,காலம்சென்ற செல்லம்மா மக்டலின் மற்றும் இராசமணி,புவனேஸ்வரி,திரேசம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை(31.03.2020)10:00 மணியளவில் நாரந்தனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அவர்தம் புகழுடல் நாரந்தனை புனித சம்பேதுருவானவர் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
நிரஞ்சனா-0033605805578
யமுனா-0094774319950

ஞாயிறு, மார்ச் 29, 2020

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா நவரத்தினம்(புளியங்கூடல்-கனடா)

மண்ணகம்:14.09.1935-விண்ணகம்:28.03.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரத்தினம் அவர்கள் (28-03-2020) சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், லட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், காந்தா(கனடா), கோமதி(கனடா), வனிதா(கனடா), மதிவதனி(கனடா), சந்திரவதனி(கனடா), குணசீலன்(கனடா- Sun Shine Village Grill) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீநிவாசன், இந்திரகுமார்(Neelam Silk), குணசேகரம்(Yarl Cream House), ஞானந்திரன்(Yarl Dosa Corner, Brampton), பத்மநாதன்(Durka Super Market, Brampton), வித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பாக்கியம், துரைச்சாமி, கனகமணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முரளிதரன்- துஷாயினி, ஜனார்தனி- சிவரூபன், முகுந்தன்- சஷித்தா, சுரேந்திரன்- விதுஷா, மகிந்தன்- திலக்‌ஷி, ஜீவிதா- ஷத்தியேந்திரா, திலக்‌ஷி- நிரோஷன், டிலன், நீலுஷா, அர்ச்சனா, கீர்த்தனா, வீணா, மயூரிகா, வினீஸ், கவின், கவிசன், மதுஷன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும், லக்சனா, அபினன், பவின், பிரணாவ், தஷ்விகா, சஸ்வின், தெய்வின் ஆகியோரின் அருமை பூட்டனும் ஆவார்.

அவர்தம் இழப்பால் துயருறும் குடும்பத்தார்களுக்கு ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாருக்கு தனது அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகிறது புளியங்கூடல்.கொம் குழுமம்.

தொடர்புகளுக்கு:

குணசீலன்(மகன்)
0016474091552 
காந்தா(மகள்)
0016473413031 
கோமதி(மகள்)
0014164276665
வனிதா(மகள்)
0014168398815 
மதிவதனி(மகள்)
0016478704473 
சந்திரவதனி(மகள்)
0016473391440

புதன், மார்ச் 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,மகாதேவி சோமசுந்தரம்(சரவணை-பிரான்ஸ்)

உறவாக:07.12.1948-இறையாக:02.03.2020
சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகாதேவி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(துரைராஜா) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்குமார், நந்தினி, ராஜினி, சிவாஜினி, காலஞ்சென்ற சுபாஜினி, ஜேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், நிர்மலாதேவி, தயாகரன், சந்திரகுமார், இதயகுமார், கரிஸ்மியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கோபாலபிள்ளை, பேரம்பலம், பூரணம், சுப்ரமணியம், குணமணி, சரஸ்வதி மற்றும் தர்மலிங்கம், செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான கமலம், பராசக்தி, கனகரட்ணம், ஸ்ரீதேவி, கமலா, துரைமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துஷான், றதோஸ், தஸ்மிதன், திக்‌ஷியா, நிக்‌ஷியா, கஸ்வியன், திஸ்விகா, சோபித், மானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை(05.03.2020)பிரான்சில் இடம்பெறும்.

தகவல்:
ஐயம்பிள்ளை சுந்தரம்பிள்ளை
சகோதரர்
சுவிஸ்.

ஞாயிறு, ஜனவரி 19, 2020

மரண அறிவித்தல்!திரு,கார்த்திகேசு பாலசுப்ரமணியம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,கார்த்திகேசு பாலசும்பிரமணியம் அவர்கள் (17/01/2020) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ் சென்ற கார்திகேசு கண்ணம்மா-பார்வதி மண இணையரின் பாசமிகு புதல்வரும்,காலஞ் சென்ற சின்னத்தம்பி தங்கமுத்து மண இணையரின் அன்புமிகு மருமகனும் இலட்சுமியின் பேரன்புமிகு கணவரும்,
காலம்சென்ற செல்வரத்தினம்,காலம்சென்ற மகேஸ்வரி,காலம்சென்ற நாகம்மா,காலம்சென்ற கிருஸ்ணபிள்ளை,மற்றும் நாகாராசா,சரஸ்வதி,பாக்கியம்,பரமேஸ்வரி,கந்தவேள்,தேவராசா ஆகியோரின் நேசமிகு சகோதரனும் குகனேசா(கனடா)குகமதி,கௌரி(லண்டன்)ஜெயகௌரி(கனடா)
ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலாதேவி(கனடா)சுப்பிரமணியம்,ஞானபாஸ்கரன்(லண்டன்)
சுரேஸ்குமார்(கனடா)தில்லைநாதன் ஆகியோரின் அன்புமாமனாரும்,வர்ஷிகா.சாம்பவி,ஐஸ்வர்யா (கனடா) திருமதி திபீகா ஹஜேந்திரன்(பிரான்ஸ்)திருமதி பிரணவி ஜீவராஜா(கனடா)பிரணவன், பிருந்தன், பிரவீனன்,ஹரிகரணி, ஜனுசன்,வைஷ்ணன்(லண்டன்)ஜெனார்த்,நிஷாந்,கிரிஷாந்(கனடா)சண்முகி,சபிதா,மருதூரன் ஆகியோரின் அன்புப்பேரனும் அக்‌ஷராவின் அன்புப்பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (19.01.2020)ஞாயிற்றுக்கிழமை (இன்று) வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று அன்னார்தம் புகழுடல் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

மரண அறிவித்தல்!திருமதி,திலகவதி விஸ்வநாதன்(வேலணை மேற்கு)

தாயாக:08.08.1935-இறையாக:07.09.2019
வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி விஸ்வநாதன் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ராசாத்தி, யோகநாதன்(லண்டன்),
லலிதா(கொழும்பு), செல்வநாதன்(லண்டன்), வாசுகி(கொழும்பு), ரகுநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுமாரி, பாலசூரியன், தயாநிதி, கங்கைவேணியன், நிசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கோமேதகவள்ளி மற்றும் தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகனேஸ்வரி, இராசலட்சுமி, மோகனதாஸ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சரசு,வேலாயுதம், பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவசரணம், கனகரெட்ணம் மற்றும் சரவணபவாநந்தன், ரதி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
பிரியந், சுகந், மயூரன், மதுரன், ராகவி, ஆருஜன், ஆருதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பானுரேகா- சபேசன், பானுப்பிரியா- சுரேன், சுதர்ஷன், திவ்யா- நிஷாந், சுகந்தன், பிரஷாந்தி, ரமேஷ், சுகந்தி, கோகுலா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வருண், சங்கவி, பிரவிந், வாகினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இல 10, இந்து மகளிர் ஓழுங்கை,
கந்தர்மட இல்லம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று
பின்னர் பி.ப 01:00 மணிக்கு வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

யோகநாதன் - மகன்Mobile : +447956385091 

செல்வநாதன் - மகன்Mobile : +447956293223 

ரகுநாதன் - மகன்Mobile : +447908643698 

பாலசூரியன் - மருமகன்Mobile : +94777421549 

கங்கைவேணியன் - மருமகன்Mobile : +94771611865 

லலிதா - மகள்Mobile : +94775540741 

வாசுகி - மகள்Phone : +94112554138