ஞாயிறு, ஜூலை 31, 2022

மரண அறிவித்தல்!திருமதி,லீலாவதி பத்மநாதன்(புளியங்கூடல்-கனடா)

மலர்வு:16.09.1929-உதிர்வு:29.07.2022
புளியங்கூடலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்- புங்குடுதீவு) கற்பகம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற அம்பலவாணர் பத்மநாதன்(இளைப்பாறிய இறைவரி திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சிவகுமார், சுரேந்திரா, பவானி, மகேந்திரன், சுரேந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,உமாதேவி, ஜெயந்தி, இரவீந்திரன், சசிகலாதேவி, பரசுதரன், தனராஜ் ஆகியோரின் மாமியாரும்,பத்மாவதி(இரத்தினம்), பரமநாதன்(பழனியப்பா), தவமணி, கருணாவதி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஜெகநாதன், நரேந்திரநாதன், சண்முகநாதன், கமலாதேவி, கையிலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனியும்,பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,விசாலி, விதுரன், அபிரா, அஸ்வின், ரிஸான், ராகவி, ஆரணி, தனிகன், மாசிலா, ஆதவன், நிலா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் 

இறுதி நிகழ்வுகள்:
01.08.2022 திங்கள் காலை 8:00 மணிக்கு  Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

சிவகுமார் - மகன்: 0014166606773 

சுரேந்திரா - மகன்: 0014169887822 

மகேந்திரன் - மகன்: 0016479604410

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,குமாரசாமி சிறீகிருஷ்ணன்(புளியங்கூடல்-கனடா)

தாய்மடி:22.10.1968-இறையடி:17.08.2021
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சொர்ணகாந்தி மண இணையரின் அன்பு மகனும்,ஸ்ரீகரன், ஸ்ரீதர்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசு, இராஜேஸ்வரி, பத்மாவதி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறம் செல்வி, செல்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான பாலகணபதிப்பிள்ளை, பகவதி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மருமகனும்,லீலாவதி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனோஜன், அகல்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


பார்வைக்கு:
Get Direction Wednesday, 
01 Sep 2021 7:30 AM - 9:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை:
Get Direction Wednesday,
01 Sep 2021 9:00 AM - 10:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

இறுதி நிகழ்வு: Get Direction Wednesday, 
01 Sep 2021 11:00 AM 
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, 
L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
ஸ்ரீகரன் - சகோதரன்:
004915214444880(ஜெர்மனி) 

ஸ்ரீதர்சன் - சகோதரர்:
 0094773186827(இலங்கை) 

முருகன் - உடன்பிறவா சகோதரர்:
 0014169108901(கனடா) 

ஆனந்தன் - உடன்பிறவா சகோதரர்:
 0016479782785(கனடா)

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

மரண அறிவித்தல்!திரு,அரியகுட்டி யோகராசா(செல்வன்)

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,அரியகுட்டி  யோகராசா(செல்வன்)அவர்கள் இன்று (20.08.2021) காலமானார், அன்னார் அமரர்களான அரியகுட்டி  நாகபூரணம் மண இணையரின் மூத்த புதல்வரும் அமரர்களான திரு,திருமதி பத்மநாதன் மண இணையரின் மருமகனும்,வசந்தியின் ஆருயிர்க் கணவரும் கஜீவனின் பாசமிகு தந்தையும் ஆவார்,அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி குகதாசன்(குகன்-ஆனைப்பந்தி)

கண்ணீர் அஞ்சலி!திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாகவும் வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றைய தினம்(20.08.2021) காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலை கொண்டு நிற்கின்றோம்!அன்னார் அமரர் திரு,ஆறுமுகம் வேலாயுதபிள்ளை[வேலாயுதபிள்ளை மனேச்சர்]அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும்,காலஞ்சென்ற ரஞ்சனாதேவி[ஆசிரியை-லண்டன்]மற்றும் சிறிமுருகன்,காலஞ்சென்ற ஜெயசீலன்[சுவிஸ்]ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,குணராசா,ராகினி,ரஜிகலா ஆகியோரின் மாமியாரும்,ஜதீசன்,யனுசா,மதுமிதா,நவீனா,நர்மதா ஆகியோரின் பாசத்திற்குரிய பாட்டியுமாவார்,அன்னைதம் பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னைக்கு எம் அஞ்சலிகளையும் காணிக்கை ஆக்குகின்றோம்!அன்னைதம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கண்ணீர் அஞ்சலி!திருமதி,யோகேஸ்வரி கந்தலிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் அமரர்களான திரு,திருமதி கந்தையா கண்ணம்மா மண இனையரின் புதல்வியும் அமரர்களான திரு,திருமதி வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் மருமகளும் திரு,வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும் விஜயறூபன்,காந்தறூபன் சிவறூபன் காலஞ்சென்ற கேமா ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆகிய திருமதி யோகேஸ்வரி கந்தலிங்கம் அவர்கள் இன்று(19.08.2021) காலமானார் எனும் செய்தி பேரிடியாய் விழுந்தது,யோகேஸ் அக்காவின் இழப்பால் துயருறும் அவர்தம் கணவர்,பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னார்தம் ஆத்மா இறையடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!யோகேஸ் அக்கா உங்களை என்றும் மறவோம்,தொலைபேசி மூலமாவது உங்கள் அன்பான பேச்சைக் கேட்டு வந்தோம் இப்போ அந்தப்பேச்சும் ஓய்ந்து விட்டதே என்று எண்ணும் போது கண்ணீரை தவிர வேறெதுவும் எமக்கு தோன்றவில்லை,உங்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள் யோகேஸ் அக்கா!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜூன் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,துரைச்சாமி தேவதாஸ்(புளியங்கூடல்-கனடா)

உறவாக:27.10.1955-உயிராக:27.06.2021
புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்டிருந்த 
சமூகசேவையாளர் திரு,துரைச்சாமி தேவதாஸ்(தேவா துரை) அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், துரைச்சாமி இந்திரபூபதி மண இணையரின் சிரேஸ்ட புதல்வரும்,

சந்திரகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சினி, சசிகலா, சிறீதரன், பத்மநயனி, சுகந்தா, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.06.2021 அன்று  Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada எனும் முகவரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:

சந்திரகாந்தா - மனைவி:
0094779178096 

துரைச்சாமி - தந்தை:
0014162657920 

மகேந்திரன் - சகோதரன்:
0014164181399 

கணேசன் - சகோதரன்:
0014167316648 

வாசுகி - சகோதரி:
0016472196380 

கந்தஞானி - சகோதரன்:
0014168971542 

ஈசன் - சகோதரன்:
0014165613427 

ராஜி - சகோதரி:
0014168462074 

சிறீபாஸ்கரன் - மைத்துனர்
0014164641183