வெள்ளி, நவம்பர் 08, 2013

மரண அறிவித்தல்!திரு,சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா(புளியங்கூடல்)

மலர்வு : 11 பெப்ரவரி 1943 — உதிர்வு : 5 நவம்பர் 2013
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா அவர்கள் 05-11-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதி அவர்களின் அன்புக் கணவரும், அன்பழகன்(அன்பன்-சுவிஸ்), மதியழகன்(மதி-கனடா), சுகந்தி(ராஜி-கனடா), விஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும், வரதேஸ்வரி(தேவி-இலங்கை), காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்ஷினி(சுவிஸ்), விஜயகுமாரி, விஜயகுமாரன், ரமணன்(Shavina Auto Service Owner) ஆகியோரின் அன்பு மாமனாரும், நடராஜா, மலைமணி(மணி), சுஜேந்திரன்(பவா), பாலேந்திரன், காலஞ்சென்ற சுலோச்சனா, தர்மாம்பாள், விஜயரஞ்சனி, ராஜேந்திரன், மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிரூஷன், சிவானு, அஜய், அஜீப், அஸ்வினி, அபிநயா, அகல்யா, அக்‌ஷயா, வினோஜா, ஷவினா, ஷன்ஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

பார்வைக்கு: சனிக்கிழமை 09/11/2013, 06:00 பி.ப — 09:00 பி.ப.
முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

பார்வைக்கு: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

கிரியை: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

இறுதிக்கிரிகை: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 12:30 பி.ப முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

தொடர்புகளுக்கு மதி — கனடா
செல்லிடப்பேசி: +16478028647
குமார்(appan) — கனடா
செல்லிடப்பேசி: +16473092880
விஜி, ரதி — கனடா
தொலைபேசி: +19057906856
ரமணன் — கனடா
செல்லிடப்பேசி: +16479916856
அன்பழகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566110513

திங்கள், நவம்பர் 04, 2013

மரண அறிவித்தல்!திரு,ஆரோக்கியநாதர் கென்னடி(சந்திரன்)

மண்ணில்.13:03:1964            விண்ணில்.02:11:2013
யாழ்ப்பாணம் பாசையூரை பிறப்பிடமாகவும் ஜெர்மன் எசன் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த முன்னைநாள் எசன்(ஜெர்மனி)உதைப்பந்தாட்ட அணித்தலைவர் ஆரோக்கியநாதர் கென்னடி (சந்திரன்)அவர்கள் 02.11.2013 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னாரது நல்லடக்க ஆராதனைகள் 08..11.2013 வெள்ளிக்கிழமை பகல் 11,00மணியிலிருந்து 12,30மணிவரை Kaldenhoverbaum Str-55   45359 Essen (Germany)எனும் முகவரியில் அமைந்துள்ள சேமக்காலையில் நடைபெறும்.

தகவல்:குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு:
மனைவி:0049201-6461458
ஜேம்ஸ்(மகலன்)சகோதரர்:
0049-17625167596
நீக்கிலாப்பிள்ளை ஜூட் மில்லர்
சகோதரர்:0049208-4448786

செவ்வாய், அக்டோபர் 29, 2013

கண்ணீர் அஞ்சலி!

நவிண்டில் நாவலர் மடத்தை பிறப்பிடமாகவும்,ஜெர்மன் எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,செல்லையா நடராஜா அவர்கள் 24.10.2013(வியாழக்கிழமை)அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.
சிறந்த பண்பாளராகவும்,
பழகுதற்கு யாவருக்கும்
இனியவராகவும்.
கடமை,கண்ணியம்,
கட்டுப்பாடு என்ற கோட்பாட்டை
தனது தாரக மந்திரமாகவும் 
கொண்டு வாழ்ந்தவர்.
அன்னாரது இழப்பானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது 
எசன் வாழ் மக்களுக்கும் 
பேரிழப்பாகவே அமைந்து விட்டது!

அவரது திடீர் இழப்பால்
துயர் சுமந்து நிற்கும் அவரது
குடும்பத்தினருக்கும்
உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை
                                                                         தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாருக்கு எம் கண்ணீர்
அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.
                                                                      --------------------------
                                                                         எசன் வாழ் மக்கள்.

சனி, செப்டம்பர் 28, 2013

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி பரம்சோதி(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி பரம்சோதி அவர்கள் இன்று அதிகாலை (28.09.2013)காலமானார்.அன்னார் கந்தசாமி மற்றும் காலம்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலம்சென்ற சிவஞானம் மற்றும் தங்கம்மா தம்பதிகளின் பாசத்திற்குரிய மருமகனும்,மோகனாம்பாளின் நேசமிகு கணவரும்,நிஷாந்தினி,நிரூபன்,காலம்சென்ற பிரபு ஆகியோரின் ஆருயிர்த்தந்தையும்,உதயகுமார் அவர்களின் அன்பிற்குரிய மாமனாரும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,மகாதேவன்(தேவர்)
காலம்சென்ற குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா)
ஆகியோரின் பாசமிகு சகோதரரும் தேவாம்பாள்,யோகாம்பாள்,கீதாம்பாள்,கிரிசாம்பாள்,காலம்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (29.09.2013)நாளை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து மயானத்திற்கு அன்னாரினது புகழுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
நிரூபன் மகன்:0094770610876
இல்லம்:00942156803029
தேவர் சகோதரர்
கனடா:0014162868391
சந்திரா சகோதரி
ஜெர்மனி:0049052518784517
உதயன் மருமகன்
கனடா:0014168935999

திங்கள், செப்டம்பர் 09, 2013

மரண அறிவித்தல்!திருமதி சாந்தலிங்கம் சரசமலர்(புளியங்கூடல்)

வரவு: 31.05.1947 — விரைவு: 09.09.2013
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த சாந்தலிங்கம் சரசமலர் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மசெல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும், சாந்தலிங்கம்(தம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), வினோதா(இலங்கை), ஜனகன்(பிரான்ஸ்), அருளினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், துஸ்யந்தா(கனடா), ஜெகதீசன்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(நாகா ரெக்ஸ் ஸ்ரைல்ஸ்), தமிழினி(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற அம்பிகைபாலன் மற்றும் புஸ்பகலாராணி(கலா-அவுஸ்ரேலியா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்தராணி(மணி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்) மற்றும் பரமேஸ்வரி, கிருஸ்ணபாலன்(பாலா-அவுஸ்ரேலியா), கணநாதன், ஆனந்தரூபன்(ஆனந்தன்), வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷனா, அஷ்விகா(கனடா), ஜெசிந்தன், கெளசிகா, யதுஷா(ஜேர்மனி), ஜீவனா, இலக்கியா, அக்‌ஷயா, கீர்த்தன், கினுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12-09-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
சாந்தலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94771380394
குமுதன் — கனடா தொலைபேசி: +19055544449
செல்லிடப்பேசி: +14166627110
விஜிதா — ஜெர்மனி தொலைபேசி: +49405710637
வினோதா — இலங்கை செல்லிடப்பேசி: +94787313090
ஜனகன் — பிரான்ஸ் தொலைபேசி: +33980579537

சனி, ஆகஸ்ட் 31, 2013

நீங்காத நினைவுகள்!

                                  மண்மகிழ:09-05-1972                              கண்நெகிழ:15-09-2012
                                                          ராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)
                                              
                                                       எங்கள் நண்பனே!பாசமிகு அன்பனே!
                                                     நீ எங்கு சென்றாய் ஓராண்டு காலமாய்?
                                         வருவாயோ நீயென வழி  பார்த்து தவிக்கின்றோம்.
                                                 இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் 
                                         உன் நினைவுகளுடனே காத்திருப்போம் தோழனே 
                                               நீ வருவாய் என்ற நம்பிக்கையில் நண்பனே!

                                              உனக்கொரு துயர் என்று அழுதவனும் நீயில்லை 
                                         எமக்கொரு துயர் என்றால் பொறுத்தவனும் நீயில்லை.
                                                   நேர காலமெல்லாம் நட்புக்கு இல்லை என்று 
                                                   பகலிரவு பார்க்காமல் உதவிக்கு நின்றவன் நீ!
                                         இப்போ யாருக்கு உதவ எங்கு சென்றாய் நண்பனே?
                                   தவிக்கின்றோம் நண்பனே நீ எம் அருகில் இல்லை என்பதால்.

                                                        எம் கண்களில் வரும் கனவுகள் கூட 
                                                       உன் நினைவுகளாகவே இருக்கின்றது 
                                  தொலைபேசி தனிலே தினமும் வந்து பேசுவாய் நீ-இப்போ 
                                      உன் கதை பேசாத நாளில்லை என்றானது எங்களுக்கு!
                                                நண்பனே நீ எம் உயிரில் உறைந்து விட்டவன் 
                                            எம் நெஞ்சிருக்கும்வரை உன் நினைவும் இருக்கும்.

                                                                                        உன் நினைவுகளுடன் 
                                                                                                   நண்பர்கள்.
    


மரண அறிவித்தல்!திரு,இளையதம்பி கணபதிப்பிள்ளை(புளியங்கூடல்)

dead