வியாழன், டிசம்பர் 12, 2013

மரண அறிவித்தல்!திரு,தர்மலிங்கம் கந்தையா

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பன், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,
கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கந்தையா அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம்(புளியங்கூடல்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா,
தாமோதரம்பிள்ளை தங்கமுத்து ஆகியோரின்
அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி(அம்பிகா), ஆச்சிமுத்து
ஆகியோரின் பாசமிகு கணவரும்,
சிவதர்மன்(Siva Kandiah Real Estate Agent, Home Life Today),
குகநேசன், சாருமதி, இளங்குமரன்(குமரன்),
பானுமதி, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, பாருமதி
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலட்சுமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நாகம்மா,
பூபதி, மற்றும் இராஜரெத்தினம்(இளைப்பாறிய இயக்குநர் யாழ் உயர் தொழில்நுட்பக்கல்லூரி), இராமச்சந்திரன்(ஓய்வு பெற்ற முகாமையாளர், விவசாய கந்தோர்- வவுனியா), திலகம்(ஓய்வு பெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி, சிவசக்தி, வைகுந்தராஜன்(விந்தன்), தர்ஷிகா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கிருபாம்பிகை, வாமதேவன், மற்றும் ஸ்கந்தராஜா(இளைப்பாறிய நில அளவையாளர்- Ontario), பாலசரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கந்தவனம், வைத்திலிங்கம், செல்லம்மா, மற்றும் அன்னமுத்து(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சிவராஜா(PTS-4th Cross Street-Colombo), நவரத்தினம்,
மற்றும் சித்ரா(ஓய்வு பெற்ற உதவி அதிபர்- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், இலங்கை), றஜனி(இலங்கை),
பாலகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், மதுஷா, நிவேதா, சாருராம்,
துளசிகாந், ஐவன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
பிரஜா, பிரணவி, கீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு:
திங்கட்கிழமை 16/12/2013, காலை 10மணியிலிருந்து 12மணிவரை நடைபெறும்.
முகவரி: St James' Cemetery & Crematorium (Wellesley & Parliament) 635 Parliament, Toronto, ON M4X 1R1

தொடர்புகளுக்கு சிவா — கனடா
தொலைபேசி: +19054725220
செல்லிடப்பேசி: +14163019540
குகன் — கனடா
செல்லிடப்பேசி: +14164572363
குமரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165682289
சாரு — கனடா
செல்லிடப்பேசி: +14163714762
பானு — கனடா
செல்லிடப்பேசி: +16479982243
விந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14162754923

திங்கள், டிசம்பர் 02, 2013

மரண அறிவித்தல்!திரு,தியாகராசா இராசேந்திரம்(பிள்ளையார்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிள்ளையார் என அழைக்கப்படும் தியாகராசா இராசேந்திரம் அவர்கள் இன்று (02.12.2013)திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் தியாகராசா நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும் தவமலரின்(மலர்)பாசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை 03.12.2013 செவ்வாய்க்கிழமை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைகளுக்காக புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

    புதன், நவம்பர் 20, 2013

    மரண அறிவித்தல்!திரு,சண்முகலிங்கம் இரகுநாதன்(வேலணை மேற்கு)

    தோற்றம் : 12-05-1957 — மறைவு : 18-11-2013
    யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் இரகுநாதன் அவர்கள் 18-11-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
    அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
    காலஞ்சென்ற ஞானரட்னம்(மட்டுவில் தெற்கு), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
    ஞானகுமாரி(ஜமுனா) அவர்களின் அன்புக் கணவரும்,
    டினேஸ்குமார்(Dipl-Ing), Dr.பிரதீஸ்குமார், ரதிஸ்குமார்(B.A), சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
    தவமணிதேவி, பூமணிதேவி, காலஞ்சென்ற செந்தில்மணிதேவி, மகேஸ்வரி(மகா-பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
    யாழினி(B.A), இலக்கியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
    ஞானசோதி, ஞானசற்குணவதி, ஞானேந்திரன்(ரஞ்சன்-பரிஸ்), ஞானவதி(பேபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    கிரியை திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 10:00 மு.ப — 01:00 பி.ப முகவரி: Wittener Straße 201 D-44577 Castrop-Rauxel, Germany

    தகனம் திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 02:00 பி.ப முகவரி: Grote Busch 10 D-48249 Dülmen, Germany

    தொடர்புகளுக்கு ரதிஸ்குமார் — ஜெர்மனி
    செல்லிடப்பேசி: +4917684015273
    பிரதீஸ்குமார் — ஜெர்மனி
    செல்லிடப்பேசி: +4917661040595
    டினேஸ்குமார் — ஜெர்மனி
    செல்லிடப்பேசி: +4917670697628
    வீடு — ஜெர்மனி தொலைபேசி: +49230542436

    செவ்வாய், நவம்பர் 12, 2013

    ஐந்தாம் ஆண்டு கண்ணீர் நினைவுகள்!திரு,நாகலிங்கம் அரியகுட்டி(சுழிபுரம்)

    ஆண்டு ஐந்து ஆனதோ தந்தையே
    நீங்கள் எமைப்பிரிந்து?
    உங்கள் அன்பு முகம் இன்னும்
    பசுமையாய் எம்முள் மலர்கிறது!
    நீங்கள் இன்னும் எம்முடன் 
    இருப்பதாகவே எமக்குள் தோன்றுகிறது!
    வாழ்க்கைப் பாதையில் 
    நேர் வழி செல்லக் கற்றுக் கொடுத்தீர்கள் 
    அன்பையும் இரக்க சுபாவத்தையும் 
    உணவுடன் உணர்வுகளாய் 
    ஊட்டி வளர்த்தீர்கள்!
    இன்று நீங்கள் மறைந்து விட்டாலும் 
    உங்கள் உயிர் எமக்குள் 
    வாழ்கிறது தந்தையே!
    இன்னும் எத்தனை ஆண்டுகள் போயினும் 
    உங்கள் உயிர் எமக்குள்ளேயே 
    வாழும் தந்தையே!

    உங்கள் நினைவுகளுடன் 
    பிள்ளைகள்:
    சுழிபுரம்-திருமலை-ஜெர்மனி

    வெள்ளி, நவம்பர் 08, 2013

    மரண அறிவித்தல்!திரு,சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா(புளியங்கூடல்)

    மலர்வு : 11 பெப்ரவரி 1943 — உதிர்வு : 5 நவம்பர் 2013
    புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா அவர்கள் 05-11-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதி அவர்களின் அன்புக் கணவரும், அன்பழகன்(அன்பன்-சுவிஸ்), மதியழகன்(மதி-கனடா), சுகந்தி(ராஜி-கனடா), விஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும், வரதேஸ்வரி(தேவி-இலங்கை), காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்ஷினி(சுவிஸ்), விஜயகுமாரி, விஜயகுமாரன், ரமணன்(Shavina Auto Service Owner) ஆகியோரின் அன்பு மாமனாரும், நடராஜா, மலைமணி(மணி), சுஜேந்திரன்(பவா), பாலேந்திரன், காலஞ்சென்ற சுலோச்சனா, தர்மாம்பாள், விஜயரஞ்சனி, ராஜேந்திரன், மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிரூஷன், சிவானு, அஜய், அஜீப், அஸ்வினி, அபிநயா, அகல்யா, அக்‌ஷயா, வினோஜா, ஷவினா, ஷன்ஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

    பார்வைக்கு: சனிக்கிழமை 09/11/2013, 06:00 பி.ப — 09:00 பி.ப.
    முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    பார்வைக்கு: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 09:00 மு.ப — 10:30 மு.ப
    முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    கிரியை: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப
    முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    இறுதிக்கிரிகை: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 12:30 பி.ப முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    தொடர்புகளுக்கு மதி — கனடா
    செல்லிடப்பேசி: +16478028647
    குமார்(appan) — கனடா
    செல்லிடப்பேசி: +16473092880
    விஜி, ரதி — கனடா
    தொலைபேசி: +19057906856
    ரமணன் — கனடா
    செல்லிடப்பேசி: +16479916856
    அன்பழகன் — சுவிட்சர்லாந்து
    தொலைபேசி: +41566110513

    திங்கள், நவம்பர் 04, 2013

    மரண அறிவித்தல்!திரு,ஆரோக்கியநாதர் கென்னடி(சந்திரன்)

    மண்ணில்.13:03:1964            விண்ணில்.02:11:2013
    யாழ்ப்பாணம் பாசையூரை பிறப்பிடமாகவும் ஜெர்மன் எசன் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த முன்னைநாள் எசன்(ஜெர்மனி)உதைப்பந்தாட்ட அணித்தலைவர் ஆரோக்கியநாதர் கென்னடி (சந்திரன்)அவர்கள் 02.11.2013 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னாரது நல்லடக்க ஆராதனைகள் 08..11.2013 வெள்ளிக்கிழமை பகல் 11,00மணியிலிருந்து 12,30மணிவரை Kaldenhoverbaum Str-55   45359 Essen (Germany)எனும் முகவரியில் அமைந்துள்ள சேமக்காலையில் நடைபெறும்.

    தகவல்:குடும்பத்தினர் 
    தொடர்புகளுக்கு:
    மனைவி:0049201-6461458
    ஜேம்ஸ்(மகலன்)சகோதரர்:
    0049-17625167596
    நீக்கிலாப்பிள்ளை ஜூட் மில்லர்
    சகோதரர்:0049208-4448786

    செவ்வாய், அக்டோபர் 29, 2013

    கண்ணீர் அஞ்சலி!

    நவிண்டில் நாவலர் மடத்தை பிறப்பிடமாகவும்,ஜெர்மன் எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,செல்லையா நடராஜா அவர்கள் 24.10.2013(வியாழக்கிழமை)அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.
    சிறந்த பண்பாளராகவும்,
    பழகுதற்கு யாவருக்கும்
    இனியவராகவும்.
    கடமை,கண்ணியம்,
    கட்டுப்பாடு என்ற கோட்பாட்டை
    தனது தாரக மந்திரமாகவும் 
    கொண்டு வாழ்ந்தவர்.
    அன்னாரது இழப்பானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது 
    எசன் வாழ் மக்களுக்கும் 
    பேரிழப்பாகவே அமைந்து விட்டது!

    அவரது திடீர் இழப்பால்
    துயர் சுமந்து நிற்கும் அவரது
    குடும்பத்தினருக்கும்
    உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை
                                                                             தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாருக்கு எம் கண்ணீர்
    அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.
                                                                          --------------------------
                                                                             எசன் வாழ் மக்கள்.