செவ்வாய், ஜனவரி 31, 2017
வெள்ளி, ஜனவரி 06, 2017
கண்ணீர் அஞ்சலி!திரு நல்லையா பரம்சோதி அவர்கள்(புளியங்கூடல்)
மிகவும் மதிற்பிற்குரிய திரு நல்லையா பரம்சோதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை காண்டீபன் பரம்சோதி அவர்களின் முகநூல் மூலமாக அறிந்து மிகவும் துயரடைந்தோம்,நல்ல அன்பும்,பண்பும்,ஆதரவும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் இவர்.தமது பெற்றோரின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டவராக,அமைதியான சுபாவம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மிகப் பேரிழப்பு என்பதுடன் அவரது உறவுகள் ஊர் மக்கள் எல்லோருக்குமே மிகப்பெரும் இழப்பாகவே அமைந்து விட்டது.இவ்விழப்பால் துயர் சுமந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
செவ்வாய், ஜனவரி 03, 2017
மரண அறிவித்தல்!திரு,கணபதிப்பிள்ளை யோகலிங்கம்(புளியங்கூடல்)
![]() |
வந்தது:03.06.1954-விரைந்தது:01.01.2017 |
காலஞ்சென்ற யோகமலர், யோகவசந்தன், யோகவாசு, யோகவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, வரதாலட்சுமி, கெங்காலட்சுமி, மற்றும் தனலட்சுமி, யோகலட்சுமி, நாகலிங்கம், மகாலிங்கம், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மாலினி, யசோதா, சிவஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் திருவுடல் புளியங்கூடல் சந்தி சரவணை வீதியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு யோகவசந்தன் —
இலங்கை செல்லிடப்பேசி: +94773534403
நாகலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94776947457
யோகலட்சுமி — இலங்கை செல்லிடப்பேசி: +94773475131
புளியங்கூடல்.கொம் குழுமம் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
சனி, அக்டோபர் 15, 2016
மரண அறிவித்தல்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(புளியங்கூடல்)
![]() |
பரிவாக:29.05.1954-பிரிவாக:13.10.2016 |
தொடர்புகளுக்கு:
பரமானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94770366331
வெள்ளி, அக்டோபர் 14, 2016
கண்ணீர் அஞ்சலிகள்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி(புளியங்கூடல்)

மூர்த்தி அண்ணா அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.வெள்ளை நிற ஆடைகளையே எப்பொழுதும் அவர் அணிந்திருப்பார்.அவரின் உள்ளமும் அப்படித்தான் பசுமையாகவே இருந்தது.அவரது பெற்றோர் கொண்டிருந்த எளிமை,பண்பு,கொடை என்பவற்றை மூர்த்தி அண்ணாவும் தாங்கியே நடந்தார்.அவரிடத்தில் கோபம் என்பதை காண முடியாது,அவரது புன்னகை வதனத்தை எப்பவுமே மறக்க முடியாது!
மூர்த்தி அண்ணாவின் இழப்பால் கண்ணீரில் உழலும் ஊர் உறவுகளுடன் புலம்பெயர்ந்து வாழும் நாமும் கண்ணீரை பகிர்ந்து கொள்கின்றோம்.
அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
வியாழன், அக்டோபர் 06, 2016
மரண அறிவித்தல்!திருமதி மங்கையற்கரசி பூலோகம்
![]() |
வரவு:27-09-1933 விரைவு:02-10-2016 |
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகளும், பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, வெற்றிவேலு, இலட்சுமி, மற்றும் விசுவலிங்கம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கண்மணி, பத்மாவதி, காலஞ்சென்ற இலட்சுமணப்பிள்ளை, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம், மற்றும் முருகேசபிள்ளை, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்:
திகதி: சனிக்கிழமை 08/10/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு தயாளன்(மகன்) — கனடா தொலைபேசி: +14163212952 ஜெயசீலன்(மகன்) — கனடா தொலைபேசி: +16474066914
சீராளன்(மகன்) — இலங்கை தொலைபேசி: +94771726644
செல்லிடப்பேசி: +94750716886
இராஜராஜன்(மருமகன்) — கனடா செல்லிடப்பேசி: +14167266317 சிவசோதி(பெறாமகன்) — கனடா செல்லிடப்பேசி: +14168793767
ஞாயிறு, செப்டம்பர் 11, 2016
எம் இதய அஞ்சலிகள்!திரு,கதிர்காமர் சண்முகரத்தினம்
நெடுந்தீவில் பிறந்து வளர்ந்து நாரந்தனையை வாழ்விடமாகக் கொண்டு தற்காலிகமாக கச்சேரியடியில் வாழ்ந்து வந்த திரு,கதிர்காமர் சண்முகரத்தினம் அவர்கள் கடந்த 07-09-2016 அன்று எம்மிடையே இருந்து பிரிந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொணா துயரடைந்து நிற்கின்றோம்.புன்னகையாலே அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவராக,மென்மையாகப் பேசும் பண்பு கொண்டவராக,நிதானமான செயற்பாடு கொண்டவராக இம்மண்ணிலே வாழ்ந்தவர்.நல்லொழுக்கம் என்பதற்கு இவரையே ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்,அத்தகைய ஒரு நல்ல பொக்கிஷமாக வாழ்ந்தவர் எம் அன்புக்கினிய மாமனார் திரு,கதிர்காமர் சண்முகரத்தினம் அவர்கள்.அன்னாரது இழப்பால் துயர் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் இதய அஞ்சலிகளை காணிக்கை ஆக்கி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)