திங்கள், அக்டோபர் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி நிமலன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சேர்ந்த திரு,கந்தசாமி நிமலன் அவர்கள் காலமானார் என்பதறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.ஆசிரியர்களான கந்தசாமி செல்வநாயகி மண இணையரின் புதல்வனாக வந்துதித்த நிமலன் அவர்கள் இளம் வயதிலேயே தனது பெற்றோர்,உடன்பிறப்புக்கள்,மனைவி,பிள்ளைகள்,நட்புக்கள்,
21.08.1978-19.10.2018
சுற்றத்தார் என அனைவரையும் பிரிந்திருப்பது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நடராஜா வித்தியாலயத்தில் நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் அன்பு,அரவணைப்பு,கண்டிப்பு என எமக்கெல்லாம் நல்ல குருவாக இருந்த செல்வம் ரீச்சரின் குடும்பத்தில் இத்தகையதொரு இழப்பு வந்திருப்பது எல்லோருக்கும் பெரும் மன வேதனையை கொடுத்திருக்கிறது.இத்தருணத்தில் அவர்களது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் நிமலன் அவர்களது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,செல்லத்துரை ரவீந்திரன்(பெரியப்பன்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
கொண்டிருந்த திரு,செல்லத்துரை இரவீந்திரன் அவர்கள் இன்று(14.09.2018) காலமானார் என்பதறிந்து 
மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.
அவரோடும் அவர்தம் குடும்பத்தோடும் பழகிய காலங்கள் 
மறக்க முடியாதவை,பழகுவதற்கு இனிய பண்பாளர்,
அளவோடு பேசும் சுபாவம் கொண்டவர்.
இளமைக்கால நினைவுகளில் எங்களுக்கு 
மூத்தவராக அவரின் ஞாபகங்கள் இன்னும் பசுமையாக தெரிகின்றது.அவரது இழப்புச் செய்தி எமக்கு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எம் கனத்த இதயத்துடன் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வெள்ளி, செப்டம்பர் 07, 2018

மரண அறிவித்தல்!திருமதி மகேஸ்வரி நவரத்தினம்(புளியங்கூடல்)

உறவாக:14.06.1948-உயிராக:06.09.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி(சின்னக்கிளி)நவரத்தினம் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலம் சென்றவர்களான சதாசிவம் பராசக்தி மண இணையரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் மண இணையரின் மருமகளும்
நவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் நாகேஸ்வரி,மகேந்திரன்,ஆறுமுகராசா,கெங்காதேவி,ஆகியோரின் அன்பு சகோதரியும்
மாரிமுத்து, சரோஜினி, இந்திரா,சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
கலாநிதி, ரவீந்திரன்(கல்மடு), ரவிச்சந்திரன்(S.J. மோட்டார்ஸ், யாழ்ப்பாணம்)குமுதினி(சுவிஸ்)மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் குகநேசன்(விஜிதா கபே யாழ்ப்பாணம்)லலிதறஞ்சனி,நந்தினி,சிவலிங்கநாதன்(சுவிஸ்)
கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஜீவிதன்,கஜீவன்,கஷானி,யதுஷன்,டினோஷா, கிர்ஷானி,உஷாந்தன்,கபிஷன்,சேயோன்(சுவிஸ்),திவ்யா,சோபிகா ஆகியோரின் பேத்தியுமாவர்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
இலங்கை- 0094771711819
0094779955919 

வியாழன், ஆகஸ்ட் 16, 2018

மரண அறிவித்தல்!திருவாளர் வேலுப்பிள்ளை நாகலிங்கம்(புளியங்கூடல்)


புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரான திருவாளர்,வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்மணி மண இணையரின் பாசமிகு புதல்வரும்,
காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் பேரன்பு மிக்க மருமகனும்,காலம் சென்ற சொர்ணம்மா
மற்றும் சந்திரா ஆகியோரின் ஆருயிர்க் கணவரும்,
காலம் சென்றவர்களான தங்கம்,அன்னக்குட்டி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலம் சென்றவர்களான அன்னபூரணம்,சோமசுந்தரம்(கார்த்தி)குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா)
கோணேஸ்வரி(கிளி)மற்றும் நகுலாம்பிகை(பிள்ளையம்மா)தேவராணி(ராணி)
கந்தலிங்கம்,
சிவநாதன்,செல்வநாயகி(செல்வம்)ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை (17.08.2018) காலை 10:00 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அவரது புகழுடல் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

திங்கள், ஜூலை 09, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி,பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன் அவர்கள்(08.07.2018)நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் மனமுடைந்து நிற்கின்றோம்.சிறந்த பண்போடு வாழ்ந்தவர்கள்,எல்லாப் பிள்ளைகளையும் தமது பிள்ளைகள்போல் அன்போடு அரவணைக்கும் தாயாக விளங்கியவர்கள்,அப்பு என்று அழைக்கும் அந்த குரலோசை இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இந்த பாசத்தாயது இழப்புச் செய்தி பொய்யாக இருக்காதோ என மனம் தவிக்கிறது.அன்னையின் இழப்பால் துடித்திருக்கும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக்  கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜூலை 03, 2018

மரண அறிவித்தல்!திரு கதிரவேலு தர்மராஜா[மகேந்திரன்-புளியங்கூடல்]

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா கதிரவேலு அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கயேந்திரன், கயரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண் கதிரவேலு(கனடா), செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணகாந்தி, கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவநீதன் , சர்மிளா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு, இரகுபதி(இலங்கை), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

பவளராணி(இலங்கை), கோமதியம்மாள்(கனடா), சண்முகராஜா(ஜெர்மனி), குலேந்திரன்(கனடா), லோகநாதன்(டென்மார்க்), விஜயராஜா(சுவிஸ்), விஜயரெட்ணம்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), சிறிஸ்கந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலன், நிவேன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 07/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 10:30 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
சண்முகராஜா(சண்- சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168760923
கயேந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +19057817041
கயரூபன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165259997
செல்வநாயகி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94212226763
கமலாதேவி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94242227082
குலேந்திரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +19057034408
இராஜேஸ்வரி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19059132184

அன்னாரது  குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை  தெரிவிப்பதுடன் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகளையும் புளியங்கூடல்.கொம் குழுமம் காணிக்கையாக்குகிறது.

புதன், ஜூன் 06, 2018

மரண அறிவித்தல்!திருமதி மனோன்மணி கந்தையா(புளியங்கூடல்)

தாய்மடி:21.10.1940 இறையடி:05.06.2018
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தையா அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், சிவநேசன், சிவமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் திலகவதி(வவா), சரஸ்வதி(தேவி), காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தயாபரி, பத்மநாதன்(ஆசிரியர் புனித சார்ல்ஸ் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிருத்தன், சுரபி, விதுஷா(சித்த மருத்துவபீட மாணவி- கிழக்கு பல்கலைக்கழகம்), துஷாபன்(தொழில்நுட்பபீட மாணவன்- மொறட்டுவை பல்கலைக்கழகம்), லோகிதா, லோகிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு:
இலங்கை
செல்லிடப்பேசி: +94775343656

அன்னாரின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் சார்பில் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.