சனி, டிசம்பர் 01, 2012

கண்ணீர் அஞ்சலி!அருளப்பு ரவீந்திரபாபு (நாரந்தனை)

நாரந்தனையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டு பின்னர் நுவரெலியாவிலும் தற்சமயம் லண்டனிலும் வாழ்ந்து வந்த அருளப்பு ரவீந்திரபாபு அவர்கள் 28-11-2012 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து துயருற்று நிற்கிறோம்.(மண்நோக்கி-04.08.1971 விண்நோக்கி -28.11.2012)
ரவீந்திரா!
வாழ்வை தொடங்கு முன்னமே-வாழ்வை
முடித்ததேனடா?
காலத்தின் கொடுமையது ஊர்
பிரிய வைத்ததடா!-ஆனாலும்
உன்னை நுவரெலியா
அனைத்ததடா!-அங்கே
நீ பெரியண்ணா குடும்பத்துடன்
வாழ்ந்து வந்த வேளையிலே
லண்டன் அழைத்ததடா!-இப்போ
அந்த லண்டனும் கசந்ததா உனக்கு?
உன்னை பெற்றெடுத்து சீராட்டி
வளர்த்தெடுத்த பெற்றோரின்
சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த
செல்லப் பிள்ளையடா நீ!-இன்று
அவர்தமை தேடியா
நீயும் விரைந்து விட்டாய்?
உன் பிரிவால் துயரடைந்து
நிற்கிறோமடா!
நீ எம்மை விட்டு மறைந்தாலும்-உன்
நினைவுகள் எம்முடனே
கலந்திருக்கும்.
கலங்கி தவிக்கும் உன் உறவுகளில்
ஒருவராக இருந்து
எம் கண்ணீர் அஞ்சலிகளை
உனக்கு காணிக்கையாக்குகின்றோம்.
உன் ஆத்மா இறையடி நிழலில்
சாந்தியடைய எல்லாம் வல்ல
இறையை பிரார்த்தித்து நிற்கின்றோம்.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

கண்ணீர் அஞ்சலி!சோமசுந்தரம் தனராசன் (புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் 24.10.2012அன்று காலமானார் என்பதறிந்து மிகவும் துயர் சுமந்து நிற்கின்றோம்.
சைவ மரபில் வந்துதித்த திரு,தனராசன் அவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கையும்,தன்னலமற்ற குணாளரும்,அமைதியான சுபாவமும் கொண்டவர்.வேலணை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் பின்னர் ஊர்காவற்றுறை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் கடமையாற்றி வந்தவர்.
அத்தோடு நில்லாமல் விவசாய செய்கையையும் மேற்கொண்டு வந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் காவல் தெய்வமாக விளங்கும் ஐயனார் ஆலயத்தின் அறங்காவலராகவும் சைவத்தொண்டு ஆற்றி வந்தவர்.நல்லதொரு குடும்பத்தலைவனை பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனக்கதவு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறது!
அத்துடன் அன்னாரது ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதுடன் எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கி நிற்கின்றோம்!

புதன், அக்டோபர் 03, 2012

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா சிவஞானச்செல்வம்(புளியங்கூடல்)

திரு துரையப்பா சிவஞானச்செல்வம் (ஊர்காவற்துறை புளியங்கூடல் செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான அறங்காவலர்) தோற்றம் : 6 மே 1945
மறைவு : 2 ஒக்ரோபர் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையின் திருவடி சரண் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான முன்னாள் ஆதினகர்த்தா) , நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி, காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
செந்தூரன், மருதூரன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானச்செல்வம், மற்றும் புவனேஸ்வரி, கமலாம்பிகை(கமலா), ஜெகதீஸ்வரி(ஜெகா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற இரத்தினம்(NR Transport), காலஞ்சென்ற திருகுலசிங்கம், மற்றும் கோபாலபிள்ளை, ஆறுமுகம்(சிவலிங்கம்), மகாலிங்கம், விஜயலட்சுமி(ராசம்), மகாதேவா(தேவர்), பரம்சோதி(சோதி), சூரியகலா(சூரி) ,சந்திரகலா(சந்திரா), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 05-10-2012 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் நொச்சிபதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் தவா(கனடா)
தொடர்புகளுக்கு செந்தூரன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777322488 மருதூரன்(மகன் - அவுஸ்திரேலியா) — இலங்கை செல்லிடப்பேசி: +94777569325 தவா(மருமகன்) — கனடா தொலைபேசி: +14162936157
ராசா(மருமகன்) — கனடா தொலைபேசி: +17789949671
கெங்கா(மருமகள்) — பிரான்ஸ் தொலைபேசி: +33140860586

வியாழன், செப்டம்பர் 27, 2012

கண்ணீர் பூக்கள் சொரிகின்றோம்!

எமை விட்டு உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் நிலைத்து வாழும் இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்களுக்கு கண்ணீர்ப் பூக்கள் சொரிந்து எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்! 
பெற்றோர் முத்தமிட:09.05.1972
 உறவுகள் சத்தமிட:15.09.2012
அன்பு"என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட நேசத்திற்குரியவன்!
நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன்!
உதவி புரிவதில் கொடையாளனானவன்!
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்
கொண்டாட்டங்களை தவிர்த்து வந்த தேசபக்தன்!

நீ சுகவீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்தாய்
என்பதறிந்து அதிர்ச்சியும்,துயரும் கொண்டு நிற்கின்றோம்.
உன் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாதது!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல
சக்தியை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரது குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை
தெரிவித்துக்கொள்கிறோம்!

எசன் வாழ் தமிழ் மக்கள்

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

கண்ணீர் அஞ்சலி!!!இராதாகிருஷ்ணன் அன்பழகன்

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி எசனை வத்திவிடமாகவும் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்கள் 15.09.2012 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதறிந்து சொல்லொணா துயரடைந்தோம்!
(அன்னை மடியில்:09.05.1972 ஆண்டவன் அடியில்:15.09.2012)
அவருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக
சமர்ப்பிக்கின்றோம்! 

அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
குடும்பம்,நட்பு வட்டம் என எப்போதும் 
ஒவ்வொரு நினைவுகளாய் பகிர்ந்து கொண்டிருப்பாய்!
தாயக நினைவுகளால் கண்ணீர் விட்டழுவாய்!
யார் தப்பு செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டுமென 
வாளெடுத்து வீரநடை போட்டவன் நீ!
அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவன் நீ!
இன்று ஏன்தான் மெளனித்தாய்?
எமை விட்டு பயணித்தாய்?
யார் யாருக்கெல்லாமோ கவிதை 
எழுதி தரச்சொல்வாய்,
இன்று உனக்கே கவிதை 
எழுத வைத்து விட்டாயே!
நண்பா!இனி என்றுதான் காண்போம் உன்னை?!

அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
உன் மனைவி கதறும் ஒலி 
உனக்கு கேட்கவில்லையா?
உன் செல்ல மகன் உன்னை தேடுவது 
உனக்கு தெரியவில்லையா?
உன் பாசமிகு பெற்றோர் வன்னி மண்ணில் 
ஒப்பாரியிட்டு புலம்புவது 
உனக்கு புரியவில்லையா?
உன் சகோதரரின் கூக்குரலோசை 
உனக்கு விளங்கவில்லையா?
உன் நண்பர்களின் பரிதவிப்பு 
உனக்கு புரியவில்லையா?
உன் உறவுகள் கூடி மாரடிப்பது 
உனக்கு தெரியவில்லையா?
அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?

அன்பின் நண்பனே!நீ எம்மை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் எம்முடனேயே  வாழும்!
உனக்கு எம் கண்ணீர் 
துளிகளை காணிக்கையாக்குகின்றோம்!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 27/09/2012, பிற்பகல் 1மணியிலிருந்து 3மணி வரை 
முகவரி:Friedhof am Hellweg, Des hellweg 95, 45279, Essen, Germany 
தொடர்புகளுக்கு
தேன்மொழி - மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4920145875067
அன்புச் செல்வன் — பிரித்தானியா
தொலைபேசி: +441322293891
இராதாகிருஸ்ணன் — இலங்கை
தொலைபேசி: +94243247991



துயருடன்!

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

மரண அறிவித்தல்!திரு,கந்தையா மகாலிங்கம்

பிறப்பு : 2 மே 1942 — இறப்பு : 18 ஓகஸ்ட் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 18-08-2012 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பாரசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவநிதி அவர்களின் அன்புக் கணவரும், சசிதரன்(ஜேர்மனி), சசிகுமார்(பிரகாஸ் - சுவிஸ்), சசிநாதன், சசிகலா(ஜேர்மனி), சசிகிதா(லண்டன்), சசிந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், லதா, கலா, மகாலக்ஸ்மி, வசந்தா, உதயகுமார், ஜெயசீலன், லங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாகும், மகேஸ்வரி, நாகேஸ்வரி, வோதநாயகி, காலஞ்சென்ற பரநிருபசிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கந்தசாமி, துரைசிங்கம், மகேஸ்வரன், கமலாசனி, கலா மற்றும் மணி, காலஞ்சென்ற குலசிங்கம், சரவணபவன் மற்றும் செல்வரானி ஆகியோரின் மைத்துனரும், மஞ்சுலாதேவி, காலஞ்சென்ற சொர்ணலிங்கம் ஆகியோரின் சகலனும், ஸ்ரிபன், நர்மதா, டினோயன், சபிதன், அனீசன், அநுாயன், சுஜிதரன், சுயன், சாரா, வசீன், தரனியா, மநிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு மனைவி — இலங்கை செல்லிடப்பேசி: +94775349509
இலங்கை செல்லிடப்பேசி: +94775724296
இலங்கை செல்லிடப்பேசி: +94771001031

வியாழன், ஜூலை 26, 2012

மரண அறிவித்தல்!திரு கபிரியேல்பிள்ளை சாள்ஸ் பாஸ்கரன்

அன்னை மடியில் : 6 ஒக்ரோபர் 1952
ஆண்டவன் அடியில் : 25 யூலை 2012
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், நாப்போலி, இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை சாள்ஸ் பாஸ்கரன் அவர்கள் 25-07-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேதுரு கபிரியேல்பிள்ளை, மேரி திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது புதல்வரும், காலஞ்சென்ற நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளையதம்பி சின்னம்மா மற்றும் நாரந்தனை தெற்கைச் சேர்ந்த அருளப்பு மேரிமக்டலின் தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும், காலஞ்சென்ற பத்திநாதர், பாவிலுப்பிள்ளை, தோமஸ், மேரி றோசலின் ஆகியோரின் அன்பு பெறாமகனும், கமிலஸ்,நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், இயேசுதாசன், பேட்றம் டோமினிக், மரிய இராஜேஸ்வரி(ஆசிரியை தமிழ் மகா வித்தியாலயம் - வவுனியா), அருட்திரு. அருள்நேசன்(யாழ் மறைமாவட்டக் குரு – கனடா), மேரி சந்திரபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மேரி, சந்திரகுமாரி, பாலசிங்கம்(இலங்கை மின்சார சபை – வவுனியா), சிவமூர்த்தி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் புவனேஸ்வரி குணரெத்தினம்(சின்னத்துரை), தெய்வானைப்பிள்ளை, இராசேந்திரம், மகாலிங்கம், நடராசா ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற மரியநாயகம், பேதுருப்பிள்ளை, மேரிலுவிசா மற்றும் அம்புறோஸ், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை மற்றும் திரேசம்மா யோண்பிள்ளை, அருட்சகோதரி நீல்மினோ(அன்புக் கன்னியர் சபை), காலஞ்சென்ற எலிசபேத் மற்றும் தர்மசீலன்(தாசன்), றூபி அஞ்சலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும், கரோலின், சர்மலின், சஞ்சீவ், றஜீவ், றுபினா, கபிரியேலா ஆகியோரின் ஆசை மாமனாரும், ரெஜினோல்ட், பிரான்செஸ்கோ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பெனடிக்ற் அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 28-07-2012 சனிக்கிழமை அன்று நாப்போலியில் இடம்பெறும் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: யோகேஸ்வரி(மனைவி) — இத்தாலி
செல்லிடப்பேசி: +390810487638
நிசாந்தன்(மகன்) — இத்தாலி
தொலைபேசி: +3933448282314
சந்திரா — இத்தாலி
தொலைபேசி: +393408621716
டோமினிக் — இத்தாலி
தொலைபேசி: +393454393917
மரிய இராஜேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94242223972
அருட்திரு அருள்நேசன் — கனடா
செல்லிடப்பேசி: +16476289403
தாசன் தர்மசீலன் — கனடா
தொலைபேசி: +15146621376 செல்லிடப்பேசி: +15146848512