வியாழன், நவம்பர் 26, 2020

மரண அறிவித்தல்!திருமதி அன்னலட்சுமி தம்பியையா!

அனலைதீவு 5ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை புளியங்கூடல் சந்தியை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிஐயா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிஐயா தம்பிப்பிள்ளை(பிரபல ஒலி,ஒளி அமைப்பாளர் புளியங்கூடல்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீகலா, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மகுலசிங்கம், மங்களராணி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும், சரஸ்வதி, கனகசபை(பிரித்தானியா), பரஞ்சோதி, செல்வராணி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்ரமணியம்(ஒலி,ஒளி அமைப்பாளர் வேலணை மேற்கு), தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற தில்லையம்பலம், தவமணிதேவி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, முருகேசபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலியும், ஸ்ரீராஜ்- சுஜிதா, நிரோசன், நீரஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சக்திவீரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

வீடு: 0014162864000 
0014162860004 

ஸ்ரீகலா - மகள்:0014168718827 

ஸ்ரீகரன் - மகன்:0014168399000 

ஸ்ரீராஜ் - பேரன்:0014163032222 

நிரோசன் - பேரன்:0014168452222 

கனகசபை - சகாேதரன்:00442088822732 

ராஜரட்னம் - தம்பி:0014165099511

திங்கள், நவம்பர் 23, 2020

மரண அறிவித்தல்!திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து மண இணையரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு,கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், விஜயலட்சுமி, நித்தியலட்சுமி, தர்மதேவி, காலஞ்சென்ற நிர்மலா, வைத்தியநாதன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், முருகானந்தம், லதா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்  24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில்-புளியங்கூடல் இந்து மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

0094773950052 

மரண அறிவித்தல்!திருமதி ரூபவதி பத்மநாதன்(புளியங்கூடல்-சுவிஸ்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ரூபவதி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்
(வாச்சரப்பா)பராசக்தி மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சி மண இணையரின் அன்பு மருமகளும், பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், ரஜனி, யசோதினி, வாசுகி, காந்தரூபன், கவிதா, கமலநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சங்கீதா, சங்கீர்தன், ராஜ்குமார் ஆகியோரின் பெரியதாயாரும், மோகனதாஸ், ஜெயசந்திரன், பாஸ்கரன்(அன்ரன்), நந்தினி, சதாசிவம், அமுதினி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பிரதாபன், மலர்தேவி, ஜெயக்குமார், ஜெயராணி, விஜயீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நேசமணி, நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகலியும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை, சிவலங்கம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், மோனிஷா, சாத்விகா, விபிஷன், சாகித்தியன், சம்யுதா, சுவஸ்திகா, யுதிஸ்திரன், ஜயனேஷ், ஆரோன், ஆகாஷ், அபிஷா, அவனேஷ், அர்ஜூன், அனுஸ்கா, மயூரிகா, டினேஷ், சௌமியா, ரியான், ஆதிஷ், அபினேஷ், அனுக்‌ஷா, மிகிலன், துபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:
பத்மநாதன் - கணவர்:0041319716739 

காந்தரூபன் - மகன்:00447888025333 

ரஜனி - மகள்:0041795543625 

மோகனதாஸ் - மருமகன்:0041344234917 

ஜெயசந்திரன் - மருமகன்:0041797212373 

கவிதா - மகள்:004915773792240                                                                                                      

செவ்வாய், அக்டோபர் 27, 2020

அஞ்சலிக்கின்றோம்!திரு,கந்தர் நாகமுத்து அவர்கள்(நெடுந்தீவு)


நெடுந்தீவை[தொட்டாரம்] பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த எங்கள் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரரும் அம்மாவின் மைத்துனரும் ஆகிய எமது சித்தப்பா[குஞ்சியய்யா]கந்தர் நாகமுத்து அவர்கள் நேற்றைய தினம்(26.10.2020)காலமானார் என்பது அறிந்து கலங்கி நிற்கின்றோம்,உறவினர்களின் கொண்டாட்டம் என்றாலே,அந்தக் கொண்டாட்டத்தை கலகலப்பாக்குவதில் அவர் எப்பவுமே முன்மாதிரியாக திகழ்ந்தவர்,தத்துவப் பாடல்களை நகைச்சுவையாகப் பாடுவார்,நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற பாடலை அவர் பாடியது எப்பவுமே என் மனதோடு நிற்கும்,அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு,அவருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்.அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

மரண அறிவித்தல்!திரு,அம்பலவாணர் பூபாலசிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வேலணை 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு,அம்பலவாணர் பூபாலசிங்கம் அவர்கள்,இன்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முத்துப்பிள்ளை மண இணையரின் பாசமிகு புதல்வரும் காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் நவமணி மண இணையரின் அன்பு மருமகனும்,வரதலட்சுமியின் ஆருயிர்க் கணவரும்,டட்சுதன்,றமியா,டட்பரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற விமலனின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி,இராமநாதபிள்ளை,குணரட்ணம் மற்றும் பராசம்மா,சுந்தரலிங்கம் ஆகியோரின் நேசத்திற்குரிய சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பூரணம்,கனகம்மா,தில்லைநாயகம் மற்றும் நாகேஸ்வரி(கனடா)விஜயலட்சுமி,விஜயலெக்சுமி(லண்டன்)பூமணி,யோகலட்சுமி,நாகசிறிகரன்(ஜெர்மனி)பிரபாகரன்(லண்டன்)பாலச்சந்திரன்(ஓய்வுநிலை கிராம அலுவலர்)இரட்ணசோதி,யோகராசா,புஷ்பராணி,பேரரசி(லண்டன்)
ஆகியோரின் மைத்துனரும்,டிலானின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை 14.09.2020 திங்கட் கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
0094773618738 

சனி, செப்டம்பர் 05, 2020

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி நிரஞ்சன்(புளியங்கூடல்-கனடா)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரஞ்சன் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த கந்தசாமி செல்வநாயகி(ஓய்வுபெற்ற அதிபர்கள்) மண இணையரின் மூத்த புதல்வரும், கலைச்செல்வி(ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம்- கிளிநொச்சி), காலஞ்சென்ற நிமலன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ. மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சங்கர்(சங்கர் ஸ்ரூடியோ- கிளிநொச்சி), கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- சுகாதார திணைக்களம், சம்மாந்துரை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருத்திகன், ஜக்சியா, நிஷசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், ஆருதி அவர்களின் அன்பு மாமாவும், காலஞ்சென்றவர்களான வடிவேலு, சொர்ணகாந்தி, ரகுபதி(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு), கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தவராசா, தர்மராசா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும், காலஞ்சென்ற தர்மராசா(கனடா), சண்முகராசா(கனடா), இராஜேஸ்வரி(கனடா), நிர்மலா(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரி(நர்மதா நகையகம்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:


கந்தசாமி செல்வநாயகி
0094772395755 
0094772860070 

சண் கதிரவேலு
0014168760923 

தர்மராஜா(மகேந்திரன்)
0019059132184

சனி, ஆகஸ்ட் 15, 2020

மரண அறிவித்தல்!திரு,செல்லையா மகாதேவா(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் வேலணையில் வாழ்ந்து வந்தவருமான திரு,செல்லையா மகாதேவா அவர்கள் 14.08.2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்,அன்னார் காலஞ்சென்றவர்களான திரு,செல்லையா செல்லம்மா மண இணையரின் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான கு.கதிரவேலு மண இணையரின் மருமகனும்,காந்திதேவியின் ஆருயிர்க் கணவரும்,சுரேந்திரன்,ரஜனி,சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் பாலசுப்ரமணியம்,
பரமநாதன், கந்தசாமி,ஜெயகாந்தன்,மகேந்திரன்,
தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுமதி(ஆசிரியை-சென்,ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம்)மகேஸ்வரன்(முருகன்-சுவிஸ்)சிவானந்தன் ஆகியோரின் மாமனாரும்,அபிநயன்,ஆதித்தன்,சகானா,துஷன்,கஜானன்,விதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னார்தம் இறுதிநிகழ்வுகள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று,புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவர்தம் புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு:
இலங்கை-0094772920285

மகேஸ்வரன்(முருகன்)
மருமகன்(சுவிஸ்)
0041787834956 
0041565552767

ரஜனி (மகள்)
0041764088776