ஞாயிறு, ஜனவரி 24, 2021

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி மகாதேவா(புளியங்கூடல்-கனடா)

உறவாக:02.01.1952-உயிராக:22.01.2021
புளியங்கூடலை சொந்த இடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி மகாதேவா அவர்கள் இன்று[22.01.2021ஐரோப்பா -21.01.2021கனடா]கனடாவில் காலமானார்,அன்னார் அமரர்களான கந்தசாமி அன்னம்மா மண இணையரின் புதல்வரும் அமரர்களான முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை மண இணையரின் மருமகனும்,மலர்விழியின் அன்புக்கணவரும்,சதீஸ்காந்தன்,லாவண்யா,கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,காலஞ்சென்றவர்களான பரம்சோதி,குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா[ஜெர்மனி]ஆகியோரின் சகோதரரும்,வரதராசா,இந்திரபூபதி,மோகனாம்பாள்,காலம்சென்றவர்களான சிவஞானச்செல்வம்(அறங்காவலர் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயம்),பத்மநாதன்,மற்றும் பாலசிங்கம்[ஜெர்மனி]ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நேசிகா,ஆழினி ஆகியோரின் ஆருயிர் தாத்தாவும் மைதிலி,சியாளினி,தனுஷா,கீதன்,கிரிஷா,வரதலக்சுமி, வரதலிங்கம்,காலம்சென்ற வரதகுமார்,மற்றும் வனஜா,வரதீஸ்,நிஷாந்தினி,நிரூபன்,காலம் சென்ற பிரபு,மற்றும் செந்தூரன்,மருதூரன்,பத்மபிரியா,சிவப்பிரியா,கலியுகன்,துஷா,துஷாந்தன்,சேகரா,சுரேஷ்,தர்ஷன்,யாழினி,முருகதாஸ்,பரமேஸ்வரன்,பிரமிளா,வரதா,சுபா,ரவீந்திரன், ஜனனி,வாகீஷன்,உதயகுமார்,ரஞ்சன்,ஜீவா அனுஜா,அனுஷா,நிவேதா,வரன் ஆகியோரின் பெரியப்பாவும் சித்தப்பாவும் மாமனாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது புகழுடல் பார்வைக்கு:
Get DirectionTuesday,
26 Jan 2021 7:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியைகள்:
Get DirectionWednesday, 
27 Jan 2021 8:00 AM - 10:00 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி நிகழ்வுகள்:
Get DirectionWednesday, 27 Jan 2021 10:30 AM 
Highland Hills Funeral Home and Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:


சதீஸ்காந்த் - மகன்:0014169028130 

லாவண்ணியா - மகள்:0014167213754 

கார்த்திகா - மகள்:0016478858391 

வாகீசன் - மருமகன்:0016475519765

மகாலிங்கம் - சகோதரன்:0094719618724

சந்திரகலா - சகோதரி:00491608368317

வெள்ளி, ஜனவரி 01, 2021

இதய அஞ்சலி!திரு,இரத்தினம் நேந்திரராஜா(வேலணை)

வேலணை கிழக்கை [வங்களாவடி]பிறப்பிடமாகவும் ஜெர்மனியிலும் தற்சமயம் வட்டக்கச்சியிலும் வாழ்ந்து வந்தவரும் அமரர்களான இரத்தினம் சரோஜினி மண இணையரின் புதல்வருமாகிய இரத்தினம் நேந்திரராஜா அவர்கள் நேற்று 15.12.2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகவும் வேதனை கொண்டோம்,இவரது பெற்றோரும் எமது பெற்றோரும் மிகவும் நட்புடன் பழகி வந்தவர்கள்,எனது பெரியண்ணாவும்[அரசன்]நேந்திரராஜா அண்ணாவும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்,இந்த இழப்பு என்றுமே மறக்க முடியாத ஒருவரின் இழப்பு!இவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னார்தம் ஆத்மா பெருங்குளம் முத்துமாரி அம்பாள் திருப்பாதங்களில் அமைதிபெற வேண்டுவதுடன் அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்!

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சுருவிலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம்மா குமாரு அவர்கள் தனது 93வது வயதில்(பிறந்தது 03.09.1927)வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் இன்று சனிக்கிழமை[19.12.2020]காலமானார்.இவர் லீலாவதி,கமலாதேவி,பாலசிங்கம்[பாலன்] சந்திரமதி,பாலகிருஷ்ணன்,முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகுருநாதன்,மகேந்திரன்,சந்திரகலா{சந்திரா-ஜெர்மனி}சரவணபவன்,பிறேமா,ஜான்சிராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.,அன்னாரது இறுதி நிகழ்வுகள் வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் நாளை இடம்பெறும்.அன்னார்தம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன்,எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வியாழன், நவம்பர் 26, 2020

மரண அறிவித்தல்!திருமதி அன்னலட்சுமி தம்பியையா!

அனலைதீவு 5ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை புளியங்கூடல் சந்தியை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிஐயா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிஐயா தம்பிப்பிள்ளை(பிரபல ஒலி,ஒளி அமைப்பாளர் புளியங்கூடல்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீகலா, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மகுலசிங்கம், மங்களராணி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும், சரஸ்வதி, கனகசபை(பிரித்தானியா), பரஞ்சோதி, செல்வராணி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்ரமணியம்(ஒலி,ஒளி அமைப்பாளர் வேலணை மேற்கு), தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற தில்லையம்பலம், தவமணிதேவி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, முருகேசபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலியும், ஸ்ரீராஜ்- சுஜிதா, நிரோசன், நீரஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சக்திவீரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

வீடு: 0014162864000 
0014162860004 

ஸ்ரீகலா - மகள்:0014168718827 

ஸ்ரீகரன் - மகன்:0014168399000 

ஸ்ரீராஜ் - பேரன்:0014163032222 

நிரோசன் - பேரன்:0014168452222 

கனகசபை - சகாேதரன்:00442088822732 

ராஜரட்னம் - தம்பி:0014165099511

திங்கள், நவம்பர் 23, 2020

மரண அறிவித்தல்!திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து மண இணையரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு,கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், விஜயலட்சுமி, நித்தியலட்சுமி, தர்மதேவி, காலஞ்சென்ற நிர்மலா, வைத்தியநாதன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், முருகானந்தம், லதா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்  24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில்-புளியங்கூடல் இந்து மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

0094773950052 

மரண அறிவித்தல்!திருமதி ரூபவதி பத்மநாதன்(புளியங்கூடல்-சுவிஸ்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ரூபவதி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்
(வாச்சரப்பா)பராசக்தி மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சி மண இணையரின் அன்பு மருமகளும், பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், ரஜனி, யசோதினி, வாசுகி, காந்தரூபன், கவிதா, கமலநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சங்கீதா, சங்கீர்தன், ராஜ்குமார் ஆகியோரின் பெரியதாயாரும், மோகனதாஸ், ஜெயசந்திரன், பாஸ்கரன்(அன்ரன்), நந்தினி, சதாசிவம், அமுதினி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பிரதாபன், மலர்தேவி, ஜெயக்குமார், ஜெயராணி, விஜயீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நேசமணி, நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகலியும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை, சிவலங்கம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், மோனிஷா, சாத்விகா, விபிஷன், சாகித்தியன், சம்யுதா, சுவஸ்திகா, யுதிஸ்திரன், ஜயனேஷ், ஆரோன், ஆகாஷ், அபிஷா, அவனேஷ், அர்ஜூன், அனுஸ்கா, மயூரிகா, டினேஷ், சௌமியா, ரியான், ஆதிஷ், அபினேஷ், அனுக்‌ஷா, மிகிலன், துபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:
பத்மநாதன் - கணவர்:0041319716739 

காந்தரூபன் - மகன்:00447888025333 

ரஜனி - மகள்:0041795543625 

மோகனதாஸ் - மருமகன்:0041344234917 

ஜெயசந்திரன் - மருமகன்:0041797212373 

கவிதா - மகள்:004915773792240                                                                                                      

செவ்வாய், அக்டோபர் 27, 2020

அஞ்சலிக்கின்றோம்!திரு,கந்தர் நாகமுத்து அவர்கள்(நெடுந்தீவு)


நெடுந்தீவை[தொட்டாரம்] பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த எங்கள் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரரும் அம்மாவின் மைத்துனரும் ஆகிய எமது சித்தப்பா[குஞ்சியய்யா]கந்தர் நாகமுத்து அவர்கள் நேற்றைய தினம்(26.10.2020)காலமானார் என்பது அறிந்து கலங்கி நிற்கின்றோம்,உறவினர்களின் கொண்டாட்டம் என்றாலே,அந்தக் கொண்டாட்டத்தை கலகலப்பாக்குவதில் அவர் எப்பவுமே முன்மாதிரியாக திகழ்ந்தவர்,தத்துவப் பாடல்களை நகைச்சுவையாகப் பாடுவார்,நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற பாடலை அவர் பாடியது எப்பவுமே என் மனதோடு நிற்கும்,அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு,அவருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்.அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!