புதன், மே 23, 2012

மரண அறிவித்தலும்,கண்ணீர் அஞ்சலியும்!


புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வேலணை 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி இரத்தினம்(NR) அவர்கள் 20-05-2012 அன்று காலமானார்.(மண்ணில் : 6 மார்ச் 1930 — விண்ணில் : 20 மே 2012)
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(முன்னாள் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான ஆதினகர்த்தா) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(NR Transport உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(SM), பரமேஸ்வரி, தவபாலசிங்கம்(தவா), மகாலட்சுமி(மகா), கங்காலட்சுமி(கங்கா), துரைராஜசிங்கம் (ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, சிவஞானசெல்வம்(புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர்), கமலாம்பிகை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிற்றம்பலம், தங்கேஸ்வரி, காலஞ்சென்ற சிவநாதன், கௌரி, யோகராஜா, குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திருக்குலசிங்கம், காலஞ்சென்ற குணசுந்தரி, கோபாலபிள்ளை, ஆறுமுகம்(சிவலிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வனஜா, வசந்தன், வதனி, மதிவதனி, வச்சலா, வதனா, வர்ஷன், கிரோஸ், சந்தோஸ், கேசவன், யாதவன், லோஜித், கானுகா, அபிலாஷா, ஆகாஷ், ஆதர்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருண், மானஷா, அஸ்மிதா, அட்சகி, அகரன், தமிழினியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 24-05-2012 வியாழக்கிழமை அன்று இந்து முறைபடி கிரியைகள் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிபதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவா — கனடா
தொலைபேசி: +14162936157 begin_of_the_skype_highlighting            +14162936157      end_of_the_skype_highlighting
பரமேஸ்வரி — கனடா
தொலைபேசி: +16046182620 begin_of_the_skype_highlighting            +16046182620      end_of_the_skype_highlighting
மகாலட்சுமி — கனடா
தொலைபேசி: +14509819667 begin_of_the_skype_highlighting            +14509819667      end_of_the_skype_highlighting
கங்காலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777605806 begin_of_the_skype_highlighting            +94777605806      end_of_the_skype_highlighting
கங்காலட்சுமி — பிரான்ஸ்
தொலைபேசி: +33140860586 begin_of_the_skype_highlighting            +33140860586      end_of_the_skype_highlighting
ராஜன் — கனடா
தொலைபேசி: +17788896930 begin_of_the_skype_highlighting            +17788896930      end_of_the_skype_highlighting
ராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774148588 begin_of_the_skype_highlighting            +94774148588      end_of_the_skype_highlighting
  1. நாம் எந்தெந்த நாடுகள் வாழ்ந்தாலும் ஊரின் வாழ்வை மறக்க முடியாது.
    அதே போல் இவர்களையும் மறக்க முடியாது.அன்புக்கும்,பண்புக்கும்,நல்
    குடும்ப வாழ்விற்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்கள்.அதே போல் தமது
    பிள்ளைச்செல்வங்களையும் நல் மான்பு மிக்கவர்களாக உருவ...ாக்கியவர்கள்.
    ஆனாலும் இந்த தாய் இன்று நம்மிடையே இல்லை எனும் செய்தி கண்டு
    மனம் பதைபதைக்கிறது,இது பொய்யாகிடாதோ என ஏங்க வைக்கிறது.
    இத்துயரிலே மூழ்கியிருக்கும் அத்தனை உறவுகளுடனும் நாமும் இணைந்து
    கொள்கிறோம்.அத்துடன் அவரது ஆத்மா இறையடி நிழலில் அமைதி பெற
    அவர் வணங்கும் மகாமாரி அம்பாளையே நாமும் வேண்டி நிற்கிறோம்!

திங்கள், மே 21, 2012

மூன்றாமாண்டு நினைவுகள்!திருமதி,அரியகுட்டி அன்னபூரணம்!

மூன்றாம் ஆண்டு நினைவுகள்!

வேலணையை பிறப்பிடமாகவும்,சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அரியகுட்டி அன்னபூரணம் அவர்கள்.
மண்ணில்:07-11-1940

விண்ணில்:22-05-2009

அன்பின் அம்மாவே உங்கள் நினைவுகளால் நாளும் பொழுதும் வேதனையால் வெந்து தவிக்கிறோம்! மூன்றாண்டுகள் என்ன முப்பது கோடி ஆண்டுகளானாலும் எம் இதயம் உள்ளவரை உங்கள் அன்பான முகம் எம் கண் முன்னே இருக்குமம்மா! யாரிடம் சொல்லி நாம் ஆறுதல் அடைவோம் அம்மா!
மனதோடு தனியே அழுகிறோமம்மா!
என்னென்ன சோதனை நேர்ந்தாலும் யாவையும் மூடி மறைத்து புன்னகை பூக்கும் அம்மாவே!
எங்கள் மீது அன்பு செலுத்த உங்களுக்கு ஈடு,இணை யார்தான் உண்டம்மா?! அம்மா உங்களை நினைத்து தவிக்கும் உங்கள் பிள்ளைகள்.

புதன், மே 09, 2012

மரண அறிவித்தல்!திருமதி திருநாவுக்கரசு கண்ணம்மா


ஊர்காவல்துறை புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கண்ணம்மா அவர்கள் 08-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ரத்தினம்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
சந்திரா, ஆனந்தரூபன்(ஆனந்தன்), இந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், பொன்னம்மா, வைத்திலிங்கம், அப்பாத்துரை, இராசையா(ஆசிரியர்), செல்லம்மா, திருநாவுக்கரசு(இரத்தினம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாதம்(பாலு), பவானந்தராணி(மணி), வேல்வேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமலர்(ராசாத்தி), காலஞ்சென்ற அம்பிகைபாலன், புஷ்ப கலாராணி(கலா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்த ராணி(மணி), மகேந்திரன், தமிழ்மாறன்(மாறன்), தமிழ்செல்வி(செல்வி), தமிழரசி(சுசி), தமிழினி(இனி), தமிழ் வேணி(வேணி)ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சுபாகரன், பிரியதர்சினி, சிந்துஜா, சுபாசினி, சுசீபன், சுசீபா, வஜீரா, மயூரா, லோஜிதா, சஜீரா, அகலினி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
யதூசா, மகீசா ஆகியோரின் பாசம் நிறை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிப் பதிவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகேந்திரன்(மருகன் - ஜெர்மனி)
(அன்னாருக்கு மனக்கதவு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது)
தொடர்புகளுக்கு
ஆனந்தன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94213006057 begin_of_the_skype_highlighting            +94213006057      end_of_the_skype_highlighting
செல்லிடப்பேசி: +94776013607 begin_of_the_skype_highlighting            +94776013607      end_of_the_skype_highlighting

சனி, ஜனவரி 14, 2012

மரண அறிவித்தலும்,கண்ணீர் அஞ்சலியும்!

திரு வரதராஜா வரதகுமார்
பிறப்பு : 12 ஒக்ரோபர் 1972 — இறப்பு : 1 சனவரி 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நீஸ் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா வரதகுமார் அவர்கள் 01-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வரதராஜா விஜயலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சிதம்பரம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுனன் அவர்களின் அன்புத் தந்தையும்,
வரதலட்சுமி, வரதலிங்கம், வரதீஸ்வரன், வனஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சந்திரசேகர், சதீஸ்குமார், சசிகரன், செல்வகுமார், பரமேஸ்வரன், ரவி, பிரமிளா, சுபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/01/2012, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Avenue de la Voie, Nice
தொடர்புகளுக்கு
சசி-முலூஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761206993
அப்பா — இலங்கை
தொலைபேசி: +94215680880
வரதா — ஜெர்மனி
தொலைபேசி: +496264928890
வரதலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4972147005942
வரதலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33605765604
சேகர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760307637
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +330623615540
கஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760466324
அன்னாரது ஆன்மா இறையடி நிழலில் அமைதி பெற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி,எமது கண்ணீர்ப்
பூக்களை அஞ்சலியாக சமர்ப்பிக்கின்றோம்!

வெள்ளி, டிசம்பர் 16, 2011

கண்ணீர் அஞ்சலி!

ஜெர்மன் எசன் வாழ் கதிரவேலு ஞானரஞ்சன் அவர்களின் தாயார் திருமதி கதிரவேலு பூபதியம்மா அவர்கள் 14-12-2011 புதன்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் துயரும் அடைந்தோம்.அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் ஞானரஞ்சன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னை பூபதியம்மாவின் திருவுடல் இறையடி நிழலில் சாந்திபெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து கொள்கிறோம்.
நிகழ்வுகள் பற்றிய விபரம்:
திகதி: திங்கட்கிழமை 19/12/2011, 05:30 பி.ப — திங்கட்கிழமை 19/12/2011, 07:00 பி.ப முகவரி: Crematoriam Schollevaar, Burgemeester Schalijlaa, 2908 LS Capelle A/D IJSSEL, Netherlands
தொடர்புகளுக்கு ஆனந்தரூபன்(குட்டி) — நெதர்லாந்து தொலைபேசி: +31180325786 செல்லிடப்பேசி: +31616974784 - — நெதர்லாந்து தொலைபேசி: +31107854078
துயர் பகிர்வோர்:
ஜெர்மன்
எசன் அல்றண்டோர்வ் தமிழ் மக்கள்.

வெள்ளி, நவம்பர் 18, 2011

திருவாளர்,இளையதம்பி செல்லப்பா அவர்களின் மரண அறிவித்தல்.

ஊர்காவற்துறை புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லப்பா அவர்கள் 17-11-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சி தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, பொன்னுத்துரை, அன்னம்மா, மற்றும் கணபதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற்வர்களான பார்வதி, ஐயாத்துரை, முருகேசு, மற்றும் தில்லையம்பலம், கண்ணம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாக்கியம், கந்தசாமி(ஜேர்மனி), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும் கௌரியம்மா, நடராசா(இந்தியா), லோகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
துரைராஜா, மோகனராணி, காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சுசீலாதேவி, மற்றும் அருட்செல்வம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமரன், சுபாகரன்(கரன்) – பர்மிலா(ஜேர்மனி), சுகந்தன்(கணக்காளர் LBCL யாழ்ப்பாணம்) - நித்யா , சுதேசன்(வைத்தியர் கிளிநொச்சி, சுகதார உதவி முகாமையாளர் SKM யாழ்ப்பாணம்), சுசீந்திரன்(வைத்தியர் சிலாபம்), சுசிகரன்(இணைப்பாளர் AOD வடமாகாணம்), கவிதா– சுந்தரேஸ்வரன்(கனடா), மயூரன்- ஜென்சி, சதீஸ- லோகாயினி, துஸ்யந்தினி, அஜந்தா(சுவிஸ்), கீர்த்தனா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தாட்சாயினி, சுதர்சன், பிரதீஸ், அருச்சுனா, சுதர்சனா, சுகுந்தா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிசாந்(கனடா), துசாந்(கனடா) கம்சிகா, ரவிவர்மன், யோர்சிகா, கிருஸ்திகா, காலஞ்சென்ற அபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, புளியங்கூடல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்காள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
துரைராஜா — இலங்கை
தொலைபேசி: +94213008261
கந்தசாமி(பெரியண்ணா) — ஜெர்மனி
தொலைபேசி: +4921516036677
யோகேஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313011670
கவிதா — கனடா
தொலைபேசி: +14169132658
சுபாகரன்(கரா) — ஜெர்மனி
தொலைபேசி: +491733618218

வெள்ளி, நவம்பர் 11, 2011

மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திரு,நாகலிங்கம் அரியகுட்டி அவர்களின் மூன்றாமாண்டு(12-11-2008) நினைவுகள்! எம்மை பாசத்தோடும்,ஒழுக்கத்தோடும் வளர்த்தெடுத்த எங்கள் அன்புத்தந்தையே நாம் உங்களை பாசத்தோடு பார்க்க வேண்டிய நேரத்தில்

சொல்லாமல் கொள்ளாமல் காலன் என்ற பாவி உங்களை அழைத்துக்கொண்டானோ? இரவு உணவருந்தி விட்டு நித்திரைக்கு சென்ற நீங்கள் மீளாத்துயில் கொள்வீர்கள் என நாம் நம்பவில்லையே தந்தையே! மூன்றாண்டுகள் ஆகி விட்டபோதும் அந்த நினைவுகள் இன்றுபோல் சுடுகிறதே தந்தையே!

தினம் தினம் உங்கள் நினைவுகளை சுமந்து தவிக்கிறோம் தந்தையே!

என்றும் அழியா நினைவுகளுடன்

உங்கள் குடும்பத்தினர்.