திங்கள், ஆகஸ்ட் 14, 2017

மரண அறிவித்தல்!திரு,கோணேசபிள்ளை இராசலிங்கம்(நாரந்தனை-சுருவில்)

தோற்றம்:25.12.1936 மறைவு:12.08.2017
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுருவில், கொக்குவில் அச்சுக்கூட வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை இராசலிங்கம்(ஓய்வு  பெற்ற ஆசிரியர் வேலணை மத்திய மகா வித்தியாலயம்)அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கோணேசபிள்ளை(அக்குராசி- பிரபல வர்த்தகர்) ஆச்சிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான துரையப்பா விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், பரமேஸ்வரி(கிளி- ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை- வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம் மற்றும் பெரியபுலம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பவான், வித்தகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமாவதி, சிவபாதசுந்தரம் மற்றும் வேதவதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜானுகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும் அழகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலட்சுமி(திரு), பூபாலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பத்மாசினி, இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, கந்தவேல், கந்தசாமி மற்றும் சூரியகுமார், கரோலின், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மிருதி அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
பிரித்தானியா
தொலைபேசி: +441212448629
செல்லிடப்பேசி: +447930868908

திங்கள், ஜூலை 31, 2017

கண்ணீர் நினைவுகள்!திருமதி பரிபூரணம் கந்தசாமி(புளியங்கூடல்)

வந்தது:19.04.1934 சென்றது:29.07.2017
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரிபூரணம் கந்தசாமி அவர்கள் 29.07.2017 அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி மிகவும் பேரிடியாய் விழுந்தது.மிகவும் நல்ல எண்ணம் கொண்டவர்களாகவும்,அயலவர்களுடன் எல்லாம் அன்போடு பழக்கக்கூடியவர்களாகவும் அவரும் அவரது கணவர்,பிள்ளைகளும் விளங்கினார்கள்.இன்று இந்த தாயாரை புளியங்கூடல் மண் இழந்திருப்பது உண்மையில் ஒரு பேரிழப்புத்தான்.இத்தருணத்தில் அவரது பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் உள்ளடங்கிய குடும்பத்தினருக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

திங்கள், ஜூலை 17, 2017

மரண அறிவித்தல்!வேலாயுதம் ஜெயசீலன்(புளியங்கூடல்-சுவிஸ்)

வரவு:25.10.1966-விரைவு:12.07.2017
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bützberg Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஜெயசீலன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்,புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரசிகலா(ரஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனா, காலஞ்சென்ற சாயினா, நர்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரஞ்சனாதேவி(லண்டன்) சிறிமுருகன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
கஜீபரன் அவர்களின் அன்பு மாமனாரும், குணராஜா(லண்டன்), ஜெயபாலன்(நெதர்லாந்து), ஜெயசந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகினி(வவுனியா), ஜெயமங்களசிரோன்மணி(ஜெர்மனி), லீலாதேவி(கனடா),லலிதாதேவி(லண்டன்),விமலாதேவி(ஜெர்மனி), விஜிகலா(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யதீசன், யனுசா,தஷாங்கனி, சானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கம்ஷாயினி, பிரஷாயினி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், மதுமிதா, நிரோஜன், நிவாகர், நிதர்சன், டாலினி, கஜிபன், மீரா ஆகியோரின் சிறிய தகப்பனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
வெள்ளிக்கிழமை 14/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.

பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 15/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland. 

கிரியை திகதி:
திங்கட்கிழமை 17/07/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium, Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland. 

தொடர்புகளுக்கு கஜீபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41792964393

சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788916759
வீடு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629231290
குணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950209491

சிறி — இலங்கை தொலைபேசி: +94774525543

திங்கள், ஜூலை 10, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு கதிரவேலு நவரத்தினம்(தம்பு-வேலணை)

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்து பின்னர் மனைவி வழி ஊரான நாவற்குழியில் வசித்து வந்தவருமான எமது சித்தப்பா திரு கதிரவேலு நவரத்தினம்(தம்புச்சித்தப்பா)அவர்கள் மண்டைதீவுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயங்களுக்கு ஆளாகி பின்னர்  அதுவே அவருக்கு நோயாகி காலன் அவரை கொண்டு சென்றான் என்று அறிந்து மிகவும் துயருற்றிருக்கிறோம்.சிறு வயதில் எமக்கு அன்பான கண்டிப்பான சித்தப்பாவாக இருந்தவர்.எம்முடன் எப்பவுமே சிரித்துப்பேசமாட்டார் பயம் இருக்கவேண்டும் என்று நினைப்பார்,என்றாலும் அன்பாக நடந்துகொள்வார்.08.12.1950ல் பிறந்த அவர்,அதே திகதியில் 08.07.2017ல் காலமானார்.சித்தப்பாவின் தந்தை கதிரவேலு,எமது அப்பப்பா கந்தையா,எமது அம்மம்மா பார்வதி ஆகியோர் உடன் பிறந்த சகோதரங்கள் ஆவர்.அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, ஜூன் 25, 2017

மரண அறிவித்தல்!திரு முத்துவேலு கணேசலிங்கம்[புளியங்கூடல்-கனடா]

யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் முத்துவேலு அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார்,காலஞ்சென்றவர்களான முத்துவேலு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ராசம்மா, சிவகொழுந்து ஆகியோரின் அன்புப் பெறாமகனும், லீலாவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கஜானனன்(பிரான்ஸ்), கஜானனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தயாளன்(பிரான்ஸ்), பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கஜானா(அதிசயா) அவர்களின் பாசமிகு பேரனும், ராஜலிங்கம்(இலங்கை), சாரதாமணி(இந்தியா), காலஞ்சென்ற தேவலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சதாசிவம்(இந்தியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும், பாக்யலக்ஸ்மி(கனடா), ராஜலக்சுமி(இலங்கை), பாலசுப்ரமணியம், புகனேஸ்வரி(கனடா), ராசேந்திரம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜபுஸ்பம், தர்மராசா, இந்திராதேவி, மற்றும் யோகராசா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), லீலாவதி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும், ராசாம்பாள், சசிமாலா(பிரான்ஸ்), சிவராஜா, புஷ்பராணி(இலங்கை), மனோகரன், சிவபாதம்(இலங்கை), சந்திரமதி(இலங்கை), சாரதா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமசாமி, சிவலிங்கம்(மானிப்பாய்), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், குணபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும். ரவீந்திரன்(இலங்கை), ரஞ்சனா(இலங்கை), சந்தா, மனோ, பவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், சிவசதீசன்(பிரான்ஸ்), செந்தில்குமரன்(பிரான்ஸ்), ஜனார்த்தனன்(பிரான்ஸ்), ஜீவிதா, நிஷாந்தன்(பிரான்ஸ்), உதயராணி(கனடா) உதயசூரியன், உதயமலர்(கனடா), உதயரோஜா(ஐக்கிய அமெரிக்கா), உதயசந்திரன்(இலங்கை), உதயமாலா(கனடா), உதயலதா(கனடா), உதயகுமார்(கனடா), சிவானந்தன்(இலங்கை), சிவஅன்பு(இலங்கை), சிவரஜினி, சிவகுமார்(இலங்கை), சிவசக்தி, சிவபாலன்(கனடா), சிவரூபன்(கனடா), சசீந்திரன்(கனடா), கவிதா(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும், அஜிந்திரன், பிரவீனா, பிருந்தா, ஆகிஷன், அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிவரை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக கனடா எடுத்துச்செல்லப்படும், இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு கஜன்(மகன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33771041394 தயாளன்(மருமகன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33769793196 வீடு — கனடா தொலைபேசி:+16473407755

சனி, ஜூன் 24, 2017

மரண அறிவித்தல்!திரு சின்னையா சுப்ரமணியம்(புளியங்கூடல்-இந்தியா)


புளியங்கூடலை சொந்த இடமாகவும் விசுவமடுவை வசிப்பிடமாகவும் தற்சமயம் இந்தியாவில் வாழ்ந்து வந்தவருமான திரு சின்னையா சுப்ரமணியம்(மாஸ்ரர்)அவர்கள் 23.06.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் அமரர்களான சின்னையா-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அமரர்களான பொன்னுச்சாமி-பாக்கியம் தம்பதிகளின் மருமகனும் நீலாம்பாளின் ஆருயிர்க் கணவரும் சித்திராதேவி(இந்தியா)மணிமாறன்(கண்ணன்-கனடா)அமரர் மணிவண்ணன்,அமரர் மணிவாசகன்,மணிசேகரன்(இந்திரன்-அவுஸ்திரேலியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும் கோபாலசிங்கம்,சுபாகனி,விஜிதரா,ஐஸ்வர்யா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று 24.06.2017 சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:
இந்தியா-0091 9585622413
அவுஸ்திரேலியா-0061420500471