
வெள்ளி, மே 25, 2018
கண்ணீர் அஞ்சலி!திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம்(புளியங்கூடல்)

புதன், மே 16, 2018
மரண அறிவித்தல்!திரு,சின்னையா நடராஜா(கனடா-புளியங்கூடல்)
![]() |
உறவாக:20.03.1930 இறையாக:10.05.2018 |
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரவீந்திரன்(கனடா), ரஜிகலா(பிரித்தானியா), யோகேந்திரன்(பிரித்தானியா), ரஜனி( Doha கட்டார்), பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜியகுமாரி(கனடா), கருணாகரன்(பிரித்தானியா), ராஜேஸ்வரி(பிரித்தானியா), அருள்ராஜ்(Doha கட்டார்), சர்மிளா(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதன், வைஷ்ணுவன், அபிரா, அபிசன், தஷன், ரிஷான், அஜித்தன், மிதூன், அஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலம்சென்றவர்களான குருசாமி(J.P), கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்), நாகம்மா ஆகியோரின் அன்புச் ககோதரரும்,
அரசரெட்ணம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), சிற்றம்பலம்(பிரித்தானியா), மகாலிங்கம்(கனடா), கோணேசலிங்கம்(இலங்கை), இந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 19/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168883524
ராணி — கனடா
செல்லிடப்பேசி: +14167542853
கோணேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766385571
மகாலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14167290955
சிற்றம்பலம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086956133
அரசரெட்ணம் — இலங்கை
தொலைபேசி: +94212221739
புதன், மே 02, 2018
மரண அறிவித்தல்!திரு,துரையப்பா குமாரதாசன்(குமார்)
ஏழாலை மேற்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் கோவில் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,துரையப்பா குமாரதாசன் அவர்கள் (30.04.2018) திங்கள் அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.அன்னார் ஆனந்தகெளரி(உதவிக்கல்விப்பணிப்பாளர் தீவகம்)யின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான துரையப்பா சரஸ்வதி மண இணையரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகேஸ்வரி மண இணையரின் மருமகனும்,சிவநேசன்,குகதாசன்,திலகவதி(ஒய்வு பெற்ற ஆசிரியை)புனிதவதி ஆகியோரின் அன்புக்கினிய சகோதரரும்,கருணா(ஆசிரியை கார்மேல் பற்றிமா கல்லூரி கல்முனை)மாலா,செல்வரத்தினம்,ஜெயச்சந்திரன்,மங்கையற்கரசி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் இன்று(02.05.2018) காலை 10:00 மணியளவில் ஏழாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று சத்தியோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
மனைவி யாழ்ப்பாணம்-0094779364397
ஞாயிறு, ஏப்ரல் 22, 2018
கண்ணீர் அஞ்சலி!திருமதி,பாக்கியம் திருநாவுக்கரசு(நயினாதீவு-கொழும்பு)
நயினாதீவை சொந்த இடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருத்துவரும் சட்டவாளருமான திருவாளர் தியாகர் திருநாவுக்கரசு அவர்களின் துணைவியார் பாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் இன்றைய தினம்(22.04.2018)காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரை ஏற்படுத்தியது.அம்மாவின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் இன்றும் கண்களினுள் நிழலாடுகின்றது.ஊர் பேச்சு வழக்கும் எளிமையான வாழ்க்கை முறையும் என்னை வியக்க வைத்திருக்கிறது.ஒரு பண்பான குடும்பம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் பாக்கியம் அம்மா அவர்கள்.அப்பு,ராசா என்று அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் ஒரு முறை அப்படி அழைக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு அம்மாவின் வார்த்தைகளில் அன்பு பொங்கும்.எமக்கு பாக்கியம் அம்மாவின் இழப்பு பேரிழப்பாகவே அமைந்திருக்கிறதென்றால் அவரது குடும்பத்தாருக்கு இது மாபெரும் இழப்பாகவே அமைந்திருக்கும் என்பது மிகவும் துயரான ஒன்றே.எல்லாவகைகளிலும் மருத்துவரும் சட்டவாளருமான ஐயாவிற்கு பக்க பலமாக இருந்து செயற்பட்டவர் பாக்கியம் அம்மா.இந்த இழப்பால் தவித்திருக்கும் ஐயாவிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அம்மாவின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற அவர்களின் குலதெய்வமாகிய நயினை நாகம்மையை பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
தொடர்புகளுக்கு:
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777588721
தியாகராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411443849
சிவநேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794853273
அலெக்ஸாண்டர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917634614030
சுரேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447975573148
சுபோதினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772186665
செம்மனச்செல்வி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776736833
ஜீவமணி — டென்மார்க்
தொலைபேசி: +4528830893
புதன், ஏப்ரல் 04, 2018
நினைவுகளோடு கண்ணீர் அஞ்சலி!திரு,தம்பித்துரை பாலச்சந்திரன்(பாலு)
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,தம்பித்துரை பாலச்சந்திரன்(பாலு)அவர்கள் நேற்றைய தினம் (03.04.2018)காலமானார் என்ற தகவல் அறிந்து மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.அவரது சண்டிக்கட்டும்,கம்பீர நடையும்,சிரிக்காமல் பேசும் நகைச்சுவையும் இன்னும் அப்படியே கண்களினுள் தெரிகிறது.எல்லோருடனும் இயல்பாக பழகக்கூடியவர்,புளியங்கூடல் சந்தியில் கடை வைத்திருந்தவர்.மிக நல்ல மனிதராகவே வாழ்ந்து வந்தவர்.தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டவராக முன்னைய காலங்களில் அவரை நாம் கண்டிருக்கின்றோம்.அவரின் இழப்பு என்பது மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது.அன்னாரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
சனி, மார்ச் 31, 2018
மரண அறிவித்தல்!திருமதி மதிவதனி நித்தியகுமார்[புளியங்கூடல்]

சகோதரியும், விஷிகன்,கிரிஷிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
மதிவண்ணன் — கனடா
தொலைபேசி: +12899812720
சதாசிவம் ஆறுமுகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771715838
புதன், மார்ச் 28, 2018
மரண அறிவித்தல்!திரு,கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(நாரந்தனை)
![]() |
உறவாக:04.02.1960-இறையாக:26.03.2018 நாரந்தனையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிர்வாக உத்தியோகத்தர்,தம்பலகாமம் உதவி அரசாங்க அதிபர்,கரைச்சி பிரதேச செயலாளர்,தற்போதைய கண்டாவளை பிரதேச செயலாளர்)அவர்கள் (26.03.2018)திங்கட்கிழமையன்று காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம். |
அன்னார் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் அன்புப் புதல்வரும்,
சரவணபவன்(முன்னாள் தபாலதிபர் ராஜகிரிய)காலஞ்சென்ற விசாலாட்சி(முன்னாள் ஆசிரியை ராஜகிரிய-மற்றும் சின்னமடு வித்தியாலயம்)ஆகியோரின் மருமகனும்,
மலர்விழியின்(ஆசிரியை யாழ்,இந்துக்கல்லூரி)ஆருயிர்க் கணவரும்,இளம்பரிதியின்(யாழ்,இந்து ஆரம்ப பாடசாலை)பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நிர்மலாதேவி,மற்றும் பரமேஸ்வரன்,செந்தமிழ்ச்செல்வி,சாந்தினி காலஞ்சென்ற மதியழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மங்கை,இந்துமதி,விக்னேஸ்வரமூர்த்தி,காந்தரூபி(பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி)மற்றும் காலஞ்சென்ற விஜயன்,செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனரும்
வித்யா,வினோசன்,ராகவி ஆகியோரின் மாமாவும்
கரிஷன்,சஞ்சியா,லக்ஸ்மன் ஆகியோரின் சித்தப்பாவும்
சவிநாத்,யதுசாந்த்,நிரோஷ்,தனுஷ்,கரிஷ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்(29.03.2018)வியாழக்கிழமை காலை 8:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 11:30 மணியளவில் அன்னாரது புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு மீண்டும் கலாசாலை வீதியூடாக கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்-009477640573
0094778286504
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)