சனி, ஆகஸ்ட் 31, 2013

நீங்காத நினைவுகள்!

                                  மண்மகிழ:09-05-1972                              கண்நெகிழ:15-09-2012
                                                          ராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)
                                              
                                                       எங்கள் நண்பனே!பாசமிகு அன்பனே!
                                                     நீ எங்கு சென்றாய் ஓராண்டு காலமாய்?
                                         வருவாயோ நீயென வழி  பார்த்து தவிக்கின்றோம்.
                                                 இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் 
                                         உன் நினைவுகளுடனே காத்திருப்போம் தோழனே 
                                               நீ வருவாய் என்ற நம்பிக்கையில் நண்பனே!

                                              உனக்கொரு துயர் என்று அழுதவனும் நீயில்லை 
                                         எமக்கொரு துயர் என்றால் பொறுத்தவனும் நீயில்லை.
                                                   நேர காலமெல்லாம் நட்புக்கு இல்லை என்று 
                                                   பகலிரவு பார்க்காமல் உதவிக்கு நின்றவன் நீ!
                                         இப்போ யாருக்கு உதவ எங்கு சென்றாய் நண்பனே?
                                   தவிக்கின்றோம் நண்பனே நீ எம் அருகில் இல்லை என்பதால்.

                                                        எம் கண்களில் வரும் கனவுகள் கூட 
                                                       உன் நினைவுகளாகவே இருக்கின்றது 
                                  தொலைபேசி தனிலே தினமும் வந்து பேசுவாய் நீ-இப்போ 
                                      உன் கதை பேசாத நாளில்லை என்றானது எங்களுக்கு!
                                                நண்பனே நீ எம் உயிரில் உறைந்து விட்டவன் 
                                            எம் நெஞ்சிருக்கும்வரை உன் நினைவும் இருக்கும்.

                                                                                        உன் நினைவுகளுடன் 
                                                                                                   நண்பர்கள்.
    


மரண அறிவித்தல்!திரு,இளையதம்பி கணபதிப்பிள்ளை(புளியங்கூடல்)

dead

ஞாயிறு, ஜூன் 02, 2013

மரண அறிவித்தல்!திரு,சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம்(சிவசிவா)புளியங்கூடல்

பிறப்பு : 26.09.1923 — இறப்பு : 31.05.2013
நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பில் தற்காலிகமாக வசித்து வந்தவருமாகிய சிவசிவா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும், சண்முகராஜா(ஆசிரியர் கொழும்பு றோயல் கல்லூரி), பாலேந்திரன், உமாதேவி, மந்திரேஸ்வரன், சிவஞானேஸ்வரி, சோமாஸ்கந்தன், சிவகுருநாதன்(பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சரஸ்வதி, தனலக்ஸ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயதேவி(ஆசிரியை பிறஸ்பெற்ரேரியன் மகளிர் பாடசாலை கொழும்பு 10), சிவமலர், நவநாதன், சிவானந்தன், சசிகலா, சுமதி(கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவலிங்கம், குருசாமி, கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்) மற்றும் நடராஜா ஆகியோரின் மைத்துனரும் ஜனுஸ்கா, விஸ்ணுகா, யாகுலன், தரணியா, றொசான், கஜதீபன், சர்விகா, சஜன், சௌமிகா, சாதுரியன், ஹரிஸ், இஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 01-06-2013 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் 5:00 மணி வரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 02-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைகள் மாலை 5:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No:26, 2/1, 42ஆவது ஒழுங்கை
கொழும்பு 06

தொடர்புகளுக்கு:
சோமாஸ்கந்தன் — பிரான்ஸ் தொலைபேசி: +33146753225
செல்லிடப்பேசி: +33615624801
நவநாதன் — ஜெர்மனி தொலைபேசி: +49212331599
சிவாநந்தன் — ஜெர்மனி தொலைபேசி: +4921528096888
சிவகுருநாதன் — ஐக்கிய அமெரிக்கா தொலைபேசி: +16786242603 செல்லிடப்பேசி: +17703651931

சனி, ஏப்ரல் 20, 2013

மரண அறிவித்தல்!திருமதி,நடராசா நீலாம்பாள்(புளியங்கூடல்)

மலர்வு : 09.10.1926 — உதிர்வு : 19.04.2013
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நீலாம்பாள் 19-04-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்து விட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னப்பு சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னப்பு நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், ஞானேஸ்வரி(பிரான்ஸ்), சிறீதரன்(கனடா), சிறீரஞ்சன்(சுங்கயிலாகா உத்தியோகத்தர் கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், தனபாலசிங்கம்(பிரான்ஸ்-வேலணை ப.நோ.கூ சங்கம்), வாசுகி(கனடா), காலஞ்சென்ற குணநிதி, கலைமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, தர்மலிங்கம்(ஆசிரியர்), சத்யபாமா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு(K.G இன்டஸ்ரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கணேஷ், செல்லம்மா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தியாகராஜா(கிராம சேவையாளர்), மகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி(சரவணை), திரு.திருமதி துரைச்சாமி, இந்திரபூபதி(கனடா), திரு.திருமதி வரதராஜன் புஷ்பமணி(கனடா), திரு.திருமதி நாராயணசாமி சிவசாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சம்மந்தியும், மயூரன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), உத்தமி(பிரான்ஸ்), அனிதா(கனடா), ரஜிதா(கனடா), அனோஜா(கனடா), வினோதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-04-2013 சனிக்கிழமை அன்று கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை புளியங்கூடலில் உள்ள அவர்களது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 22-04-2013 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதி கிரியைகள் நடைபெற்று, பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சோ.தனபாலசிங்கம் — பிரான்ஸ் தொலைபேசி: +33142623071
செல்லிடப்பேசி: +33651449541

இலங்கை செல்லிடப்பேசி: +94777377384

சிறீ — கனடா தொலைபேசி: +14167495532

திங்கள், ஏப்ரல் 15, 2013

மரண அறிவித்தல்!திரு,பொன்னுச்சாமி சோதிநாதன்(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சோதிநாதன் அவர்கள் 14-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும், கனுஜா(கனடா), நிருஷா, நிருஷன்(N.K.V. றேடிங் கம்பனி பொரளை- உரிமையாளர்), நிதர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகரன்(கனடா), அருச்சுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மனோன்மணி, காலஞ்சென்ற நவரத்தினம், மற்றும் திலகவதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, விசுவலிங்கம், நாகராஜா, அருந்ததி, மற்றும் கமலாதேவி, சந்திரபாலா(லட்சுமி காகிதாதி- உரிமையாளர்), குமரகுருபரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவம் அவர்களின் சகலனும், விஜயலட்சுமி, ரோகினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும், அபிநயா, சபிந்தன், அர்ச்சயா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,
பின்னர் தகனக்கிரியைகளுக்காக புளியங்கூடல் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு.
இலங்கை:தொலைபேசி: +94214911878
சசிகரன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +14166999556 

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

மரண அறிவித்தல்!திருவாளர்,சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம்(புளியங்கூடல்)

தந்தையாய்: 24.06.1942 — தெய்வமாய்: 13.04.2013
புளிங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 13-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மீனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், நளாயினி(செல்லா- கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தகப்பனும், முத்துக்கிருஸ்ணன் தயாளன், வீரசிங்கம் விஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கோணேஸ்வரன், மகேஸ்வரன், சுமதி, கோமதி, ஸ்ரீமதி, ஞானேஸ்வரன் ஆகியோரின் பெரியப்பாவும், செந்தமிழ் செல்வன், உமாதேவி, அருட்செல்வன், ஸ்ரீதேவி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, ஞானசம்பந்தன் காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கேதீஸ்வரன் அவர்களின் சகலனும், தேனுஷா, கவிஷா, அபிஷா, டிலக்ஷா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:முத்துக்கிருஷ்ணன் தயாளன்(மருமகன்)
தொடர்புகளுக்கு:
கனடா தொலைபேசி: +14162989913
இலங்கை செல்லிடப்பேசி: +94774086781